உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 28.pdf/294

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிவஞான போத ஆராய்ச்சி

269

மைப்போ, அங்ஙனம் அணுக்களின் அமைப்புப்போல் ஒரு படித்தாய் நிகழாமல் இருவேறு வகைத்தாய் நிகழ்தலானும்; உயிரற்ற பொருள்களின் அமைப்புக்கும் அழிவுக்கும் ஏதொரு நோக்கமும் பயனும் புலனாகாதிருக்க, உயிருள்ள பொருள்களின் ஒவ்வோர் உறுப்பின் அமைவுக்கும் அழிவுக்கும் நோக்கமும் பயனும் இனிது விளங்கிக் கிடத்தலானும்; உயிர்ப்பொருளைச் சார்ந்து அவற்றிற்குப் பயன்படுமுகத்தால் உயிரில் பொருளின் அமைப்புக்கு ஒரு காரணந் தோன்றக் காண்டுமன்றி, அவற்றைச் சாராதவழி அவற்றின் அமைப்புக்கு வேறொரு தனிக் காரணங் காண்டல் இயலாமையானும் அவ்வாண் பெண்ணமைப்பே முழு முதற் கடவுளின் இருப் பையும் அறிவையும் ஆற்றலையும் அருளையும் நனிவிளங்கக் காட்டுந் தகைத்தாமென்று கடைப்பிடிக்க.

இனி, ஆண்பெண்ணமைப்பிற் பட்ட உயிர்களுக்குப் பயன்படு முகத்தால் உயிரற்ற கல் மண் முதலிய பொருள் களும் அவற்றின் தொகுதியான உலகமுந் தோற்று விக்கப்பட்ட நோக்கம் நன்கு புலனாதலின் உயிருடை ய பெண்ணமைப்பைச் சார உயிரில்லா உலகவமைப்பினை வைத்து அதனை ‘அது' வென்னுஞ் சுட்டுப்பெயரால் ஆசிரியர் மெய்கண்ட தேவநாயனார் குறித்தருளினார் என்க.

ஆண்

உலகமும் உலகத்துப் பொருள்களும் ஆண்பெண்ண மைப்பிற்பட்ட உயிர்கட்குப் பயன்படுமாற்றினைச் சிறிது விளக்கு கவெனின்; விளக்குதும், ஆண்பெண் சேர்க்கையாற் புதிது பிறந்தமகவு பாலையின்றி உயிர் வாழ்தலும் வளர்தலும் இல்லையன்றே; அங்ஙனம் அதற்கு இன்றியமையாத பால் உணவுதாயின் உடம்பிற் சுரந்தொழுகி அம்மகவினை வளர்த்தற்குப் பயன்படுதல் காண்க. பின்னைக் குழவிப் பருவங் கடந்தபின் பாலுடன் சோறும் வாழை நாரத்தை முதலிய வற்றின் கனிகளும் பிள்ளைகள் செழித்து வளர்தற்குப் பயன்படுகின்றன. அதன்பிற், காளைப்பருவம் நடைபெறுங் கால் உண்டற்குக் கோதுமை கம்பு சோளம் கேழ்வரகு முதலான வித்துகளும் பருகுதற்கு நீரும் மோத்தற்கு முல்லை மருவு மருக்கொழுந்து சந்தனம் முதலான நறுமணப் பொருள்களுங், கண்டு மகிழ்தற்கு ஆறுங் குளனுங் காவும் மலையுமாகிய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_28.pdf/294&oldid=1591630" இலிருந்து மீள்விக்கப்பட்டது