உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 28.pdf/295

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

த

270

மறைமலையம் - 28

இயற்கைப் பொருள் களுங், கண்ணொளியினை விளக்குதற்குக் கதிரவனுந் திங்களு மாகிய ஒளிப் பிழம்புகளும், அடுதல் சுடுதல் காய்தல் முதலிய தொழில்களைப் புரிதற்கு நெருப்பும், உயிர்த்தற்கும் வெம்மை தீர்த்தற்குங் காற்றும், இனிது இ உறங்குதற்குப் பஞ்சணைகளும், வீடு சமைத்தற்கு மரங்களும், மண்ணும், வீட்டிற் புழங்குதற்குக் கல் மண் ஈயம் இரும்பு செம்பு பித்தளை முதலியவற்றால் அமைத்த ஏனங்களும், பல்கலை பயின்று அறிவினை வளர்த் தற்கு ஏட்டுச் சுவடிகளும், உழுதற்கும் ஊர்தற்கும் எருதுகள் குதிரைகளும், உடுத்தற்கும் போர்த்தற்கும் பஞ்சாடை பட்டாடைகளுங் கம்பளிப் போர்வைகளும், அழகிதாக ஒப்பனை செய்துகொள்ளுதற்கு வெள்ளிக்கலன் பொற்கலன் மணிக்கலன்களும், இன்பம் நுகர்தற்கும் மக்களைப் பெறுதற்கும் ஏற்ற படியாக அமைந்த ண் பெண் உடம்புகளும் பெரிதும் பயன்படுதல் காண்க. த்தனைப் பொருள்களோடுமிருந்து மக்களும் ஏனைப் பல்லுயிர் வகைகளும் நன்கினிது வாழ்தற்கு இன்றி யமையா இடமாக இந்நிலவுலகம் பயன்படுதலும் அறிந்து கொள்க.

இங்ஙனம் ‘அது'வென்று ஈற்றில் வைக்கப்பட்ட சுட்டுச் சொல் உயிரில்லாப் பொருள்களான கல் மண முதலியவற்றின் றொகுதியா யமைந்த உலகினை நன்கு ணர்த்தா நிற்பவும், இத்தமிழ்ச் சிவஞானபோத முதல் நூலை வடமொழிக்கண் மொழிபெயர்த்து வைத்த எவரோ ஒருவர், ஆசிரியர் மெய்கண்டதேவ நாயனாரின் நுண்ணிய கருத்தினை உணர்ந்து கொள்ளமாட்டாமல், “அது' வென்னுஞ் சொல்லாற் சுட்டப் பட்டது அலியேயோ (நபும்ஸக) மெனப் பிழைபடக்கொண்டு 'ஸ்த்ரீபும்நபும் ஸகா தித்வா' எனச் சூத்திரஞ் செய்திட்டார். அவர் செய்த பிழையினை ஆராய்ந்து கண்டறியாமற், சிவஞான போதத்திற்குப் பேருரை சிற்றுரை வகுத்த சிவஞான முனிவரும் அது' வென்னுஞ் சொல்லுக்குத் தமது பேருரைக்கண் ‘அலி’ என்றே பொருளுரைத்தார்.

அங்ஙனம் அவன் அவள் அது வென்னும் மூன்று சாற்களும் அறிவுலகினையே (சித்துப் பிரபஞ்சத்தினையே) உணர்த்துமாயின், அறிவில்லா வுலகினை (சடப்பிரபஞ்சத் தினை) உணர்த்துதற்குச் சூத்திரத்தின் கண் வேறு சொல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_28.pdf/295&oldid=1591631" இலிருந்து மீள்விக்கப்பட்டது