உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 28.pdf/296

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிவஞான போத ஆராய்ச்சி

271

இன்மையானும், அஃதில்லையாகவே அதன்கண் நிகழுந் தோற்றம் நிலை இறுதி என்னும் முத்தொழில்களும் இறைவ னாருவனை வேண்ட ாமலே நடை நடைபெறுமெனப்பட்டு முழுமுதற்கடவுளுண்மையினை நாட்டவெழுந்த ஆசிரியன் கருத்துக்கு முழுமாறாய் முடிதலானும், இந்நூலை வடமொழிக் கண் மொழிபெயர்த்தவரும் அவரைப் பின்பற்றிய சிவஞான முனிவரும்மெய்கண்டான் சித்தாந்தம் நுணுகியுணராராய் இழுக்கினாரென்றுணர்ந்து கொள்க. தமது பேருரைக்கண் அது' என்பதற்கு ‘அலி' எனப் பொருளுரைத்த சிவஞான முனிவரே அதற்குப் பிற்காலத்தே தாம் வரைந்த சிற்றுரைக்கண் அவ்வாறு அதற்குப் பொருள்கூறக் காணாமையின் அதற்கு அலியெனப் பொருள் கோடல் பொருந்தாமையினைப் பின்னர் அவருந் தெளியக் கண்டாரென்பது நன்கு புலனாகின்றது.

மேலுங், கல் மண் முதலியவற்றின் தொகுதியான உயிரில்லுலகத்தின்கண் அதன் இருப்பினையும் அதன் பகுதிகளிற் சில அழிதலினையும் நாங் காண்கின்றனமே யன்றி, மற்று அதன் றோற்றத்தினை நாங் கண்டதில் லாமையின், இவ்வுயிரில் லுலகத்தில் வைத்து இறைவனால் நடத்தப்படுந் தோற்றம் நிலை இறுதி என்னும் முத் தொழில் களையும் நம்மனோர் முழுதும் உணர்தல் இயலாமை கண்டு கொள்க. எனவே, உயிரில்லுலகத்தின் தோற்றத்தை அறிய மாட்டாத நம்மனோர், அது கொண்டு அறியற்பாலதான இறைவனிருப்பி னையும் அறியமாட்டுவாரல்லர் என்பது.

மற்று, ஆண் பெண் பிறப்பினையும் இருப்பினையும் இறப்பினையுமோ நம்மனோர் எல்லாரும் எக்காலத்துந் தங் கண்ணெதிரே கண்டு வருகின்றமையின், இவ்வுயர் திணை யமைப்பின்மேல் வைத்து இறைவனுண்மையினை நாட்டு தலே சாலச் சிறந்த அறிவின் முறையாமென்க. அற்றேல், ஆண் பெண் அல்லாத அலி பேடி முதலிய பிறவிகளைக் கூறாமை ஒரு குறைபாடாய் முடியாதோ வெனின்; முடியாது. இறைவனது படைப்பில் ஏதொரு குறைபாடும் நிகழாது. உயர்திணைப் படைப்பில் ஆண்பெண் என்னும் இருபகுப்பேயன்றி, அலி பேடி என வேறொருபகுப்புச் சிறிதுமே இல்லை. தாய் தந்தையர் பிழைபாடாக நடத்தலால் ஆணுறுப்புக் குறைந்ததே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_28.pdf/296&oldid=1591632" இலிருந்து மீள்விக்கப்பட்டது