உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 28.pdf/297

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

272

ஆண்

மறைமலையம் - 28

அலியென்றும், பெண்ணுறுப்புக் குறைந்ததே பேடியென்றும் உணரற்பாற்று. ஆகவே, உயிருடைய உயர்திணைப்பிறப்பாகிய ண் பெண் என்னும் இருவேறு அமைப்பிலிருந்தும், அவ்விரண்டுக்கும் பயன்படு முகத்தான் தனது படைப்பின் நோக்கத்தைத் தெரிவிக்கும் உயிரற்ற அஃறிணைப் பிறப்பாகிய இவ்வுலகத்திலிருந்தும் முழுமுதற் கடவுளுண்மையினைத் தெளிவுற நிறுவுதலே ஆசிரியர் மெய்கண்ட தேவ நாயனார் தந்திருவுளக் கருத்தா மென்று கடைப்பிடிக்க. அதுவேயுமன்றி, ‘அவனவளது” எனுஞ் சொற்றொடரிற் போந்த அது என்ப தனாற் சுட்டப் பட்டது அலியேயாயின், ஆசிரியர் மெய் கண்டதேவரே அச்சொற்றொடர்க்கு வரைந்த தமது வார்த்திகப் பொழிப்பின் கண் 'அலி' அலி' யென அதனைக் கிளந்தெடுத்து ரைத்திருப்பர். மற்று, அவர் அவ்வாறுரையாது, “உளதாய்,

66

ஒருவன் ஒருத்தி ஒன்று என்று சுட்டப்பட்ட பிரபஞ்சம் உற்பத்தி திதி நாசம் உடைத்தென்றது”

என ‘ஒன்று' என்றே கூறினமையால், அவர்க்கது கருத்தன் றென்பது தெற்றென விளங்கா நிற்கின்றது. ஈண்டு ஒன்றென் னுஞ் சொல்லாற் குறிக்கப்பட்டது, உயிரில்லாவுலக மேயாம். இதனை நன்கு கண்டே, சிவஞானபோதத்திற்கு ஒரு விரிவுரை போற் 'சிவஞான சித்தி' என்னும் வழிநூல் செய்த அருணந்தி சிவனாரும், இம்முதற் சூத்திரப் பொருளை விளக்கி,

“ஒருவனோ டொருத்தி யொன்றென் னுறுரைத்திடும் உலக மெல்லாம்

வருமுறை வந்து நின்று போவது மாத லாலே'

என ஓதினார்; இதன்கண்ணும் அலி என்னுங் குறிப்பு ஒரு சிறிதுங் காணப்படாமை நினைவிற் பதிக்கற்பாற்று. அது நிற்க.

முத்தொழில் நிகழ்ச்சி

னி, முதன்முதல் ஆண்பெண் பிறவி எப்போதுண் டாயின? அவற்றை முதலிற் கண்டவர் யாவர்? என்னும் வினாக்களுக்கு விடை கூறுதல் எவராலும் இயலாது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_28.pdf/297&oldid=1591633" இலிருந்து மீள்விக்கப்பட்டது