உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 28.pdf/298

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிவஞான போத ஆராய்ச்சி

273

முதன்முதற் றோன்றிய ஆண்பெண் தோற்றம் எவராலும் அறியப்படாவிடினும், அதன் வழிவழித் தொடர்ந்து வரும் ஆண்பெண் தோற்றத்தினை அறியாதார் எவரேனும் உளரோ? இலரன்றே. ஆண் பெண் சேர்க்கையின் வழியே ஆண் பெண் பிறவிகள் வாழையடி வாழையாய் மறித்து மறித்துந் தோன்றிக் கொண்டேயிருக்கின்றன. ஆகவே, ஆண் பெண்ணயிர்களின் தோற்றம் எவரானுங் கண்கூடா யறியப்பட்ட தொன்றாகவே தொடர்ந்து நிகழா நிற்கின்ற தென்றோர்ந்துகொள்க. இத்தகைய பிறவித்தோற்றம் இறைவனாலன்றி வேறெவராலும் வேறெத னாலும் உண்டா காமை யுணர்தல் வேண்டும்.

பல

இனித்,தோன்றிய இவ்வுயிர்ப் பிறவிகள் சில ஆண்டுகள் நிலையாய் நின்றுயிர் வாழ்ந்து வருதலும் எவர்க்குந் தெரிந்ததோர் உண்மை நிகழ்ச்சியேயாம். மக்கள் எல்லாருந் தாம் என்றும் நிலையாயிருப்பதாகவே நினைந்து வருதலாற்றான் அவர்க்கு உயிர் வாழ்க்கை இனிது நடை பெறா நிற்கின்றது; வண்ணம் அங்ஙனம் அவர்களுள் ளத்தில் வேரூன்றி நில்லாவிட்டால், நாளைக்கு நாம் இருப்பது உறுதியில்லையே யென்று அவர்கள் நினைத்து விடுவார்களானால், அவர்கள் முயற்சியவிந்து விரைவில் மாண்டுபோவரல்லரோ? நீண்ட வாழ்க்கையே, உயிர்கட்கு அறிவையும் இன்பத்தையும் வழங்கக் குறித்த இறைவன் றிருவுளக்குறிப்புக்கு ஒத்ததாகையால், அதனை நிலையாக நினைக்கும் எண்ணமும் மக்களுள்ளத்தில் ஆழப்பதிந்து நிற்குமாறு னெ றோர்ந்துகொள்க. ஆகவே, நிலையும் வாழ்க்கையைப் பற்றிய எண்ணமும், அவவெண்ணத்திற்கேற்ப நூறாண்டுகள் வாழ்ந் திருக்கும் வகையும் இறைவன் றிருவருளினாலேயே நிலை பேறுற்று நடத்தல் நன்கு விளங்காநிற்கும். மக்கள் ஒழுங்கான முறையில் ஒழுகிவருவராயின், நூறாண்டுகளும் அவற்றிற்கு மேலும் உயிர்வாழ்ந்திருத்தல் கூடுமென்பது எமது மக்கள் நூறாண்டுயிர் வாழ்க்கை என்னும் நூலில் விரித்து விளக்கப் பட்டிருக்கின்றது.

றைவன் ஏவுகின்றன

னன்

இனி, உயிர்கள் மேற்கொண்டிருக்கும் பலதிறப்பட்ட உடம்புகளும் என்பு தோல் நரம்பு தசை முதலான பருப் பொருள் களால் ஆக்கப்பட்டிருத்தலால், அவை நாளேற

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_28.pdf/298&oldid=1591634" இலிருந்து மீள்விக்கப்பட்டது