உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 28.pdf/299

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

274

மறைமலையம் - 28

நாளேறத் தேய்ந்து பழுதுற்றுப்போகின்றன; பழுதுற்ற அவ்வுடம்பி லிருந்து அவையிற்றை இயக்க மாட்டாத உயிர்கள் அவை தம்மைக் கீழ்வீழ்த்தி வானூடு சென்று, வேறு புதிய வுடம்புகளின் உட்புகுகின்றன. இஃது எதுபோல வெனின், ஒருவன் தான் மேற்கொண்ட சட்டை மிகக் கிழிந்து தன்னாற் பயன்படுத்தக் கூடாத நிலையை யடைந்த பின் அதனைக் களைந்தெறிந்து அவன் வேறொரு நல்ல புதுச்சட்டையை மேற்கொள்வது போல வென்க. இன்னும் பாம்புகள் ஓராண்டிற் பல காலுந் தம்முடம் பின் மேற் றோலைச் சட்டைபோல் உரித்துவிடுதலும் இவ்வுண் மையினை விளக்கும் ஓ எடுத்துக்காட்டாகும். ங்ஙனமாக, ஓரறிவு முதல் ஆறறிவுகாறுமுள்ள உயிர்கள் அத்தனையும் எடுக்கும் எண்ணில் பல்கோடியுடம்புகளுடன் சிறிது காலத் திற்குப் பின் அழிந்துபோதலை நங் கண்ணெதிரே காண் கின்றமாகலின், அவை அங்ஙனம் அழிந்தொழியுமாறு அழித்தற்றொழிலை ஓவாது நடத்தும் ஒரு முதல்வன் உளனென்பது தேற்றமேயா

மென்க.

ஓர்

நன்று சொன்னீர். அணுக்கள் கூடுங்கூட்டமும், அது சிறிது காலம் நிலையும் ருப்பும், பின்னர் அது குலைந்துண்டாம் அழிவும் ஒரு வினைமுதலை நாடாமல் இயல்பாகவே நிகழக் காண்டுமன்றி வேறில்லாமையின், ம்முத்தொழில் நிகழ்ச்சிக்கும் முதல்வன் ஒருவன் வேண்டு மென்றுரைப்பது மிகையேயா மெனின்; அற்றன்று. அணுக்கள் கூடுங்கூட்டம் நீரின் தட்ப ஆற்றலாலும், அவை பிரிந்தொழியும் அழிவு தீயின் வெப்ப ஆற்றலாலும் நிகழ் கின்றனவென்றே இயற்கைப் பொருள் நூலாரும் இயம்பு தலானும், இவ்விருவகை யாற்றலும் முழுமுதற் கடவுளிடத்தில் இரண்டற விரவி நிற்கும் அம்மைக்கும் அப்பற்கும் உரியவாகு உரியவாகுமென்று சித்தாந்த நூல்வல்ல ஆசிரியர் நுவலு தலானும், ஒன்று சேரும் ஆற்றலும் அதற்கு மறுதலை யான வேறு பிரியும் ஆற்றலும் அறிவில்லா அணுக்கள் பால் உளவென்றல் பெரியதொரு மாறுகோ ளுரையா மென்க. கூடுதல் பிரிதல் கூட்டல் பிரித்தல் என்னுந் தன்வினை பிறவினைகள் அறிவுடைய உயிர்கள்பாலன்றி, அறிவில்லா பால் உளவாகா வென்பது ஆராயச்சி யானும்

காண்ட

அணுக்கள்

லளவை

யானும்

னிது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_28.pdf/299&oldid=1591635" இலிருந்து மீள்விக்கப்பட்டது