உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 28.pdf/300

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிவஞான போத ஆராய்ச்சி

275

விளங்குதலாற், கூட்டும் அம்மையும் பிரிக்கும் அப்பனும் ஒருங்கு விரவிய முழுமுதற் கடவுள் அம்முத்தொழில் நிகழ்ச்சிக்கும் இன்றியமையாத காரணமாய் வேண்டப்படும் என்க.

முத்தொழில் நிகழ்ச்சிக்கடனாவது உள்பொருளேயாம்

இனித் தோற்றம் நிலை இறுதி என்னும் முத் தொழிலும் உள்பொருளாகிய மாயையில் நிகழ்வனவே யல்லாமல், ல்பொருளில் நிகழ்வன அல்ல. குதிரைக்குக் கொம்பும், ஆமைக்கு மயிரும், வானின் கட்டாமரைமலரும் என்ற மில்லாப் பொருள்களாதலை அறியாதார் யார்? குதிரைக்கு நேற்று இரண்டு கொம்புகள் முளைத்தன; இன்று அவை அதன் தலைமேல் நீண்டு காணப்படுகின்றன; நாளை அவை விழுந்து போம் என்று எவரேனுஞ் சொல்வராயின் அவரது சொல்லை எவரேனும் நம்புவரோ? அங்ஙனமே, மற்றொருவர் ஆமை யோட்டில் முளைத்த மயிர்கொண்டு ஒரு கம்பளம் நெய்து கொண்டு வந்திருக்கின்றோம் எனப் புகல்வராயின் அவரது சொல்லை எவரேனும் நம்புவரோ? இன்னும், ஒருவர் வானத் திடைவெளியில் மலர்ந்த தாமரை மலர் சில கொண்டு வந்திருக் கின்றோம், அவற்றைக் கொண்டு இறைவற்கு வழிபாடு ஆற்றுக எனக் கூறுவராயின் அவரது சொல்லை மெய்யென நம்புவார் எவரேனும் உளரோ? இவைபோலவே, மாயை யென்பது இல்லாத பழம்பொருள் என்றும், அதன்கணின்று இவ்வுலகம் வெறுந்தோற்றமாத்திரையாய்க் காணப்படுகின்றது என்றும் கூறும் புத்தர் மாயாவாத மதத்தவருரை பொருளற்ற

புல்லுரையாமென்க. அல்லதூஉம், ஒரு பொருளப்பற்றிய உணர்ச்சியும் நினைவும் அப்பொருளைக் கண்டவர்க்கன்றி, அல்லது கண்டு அதனை விளக்கிக்கூறக் கேட்டவர்க்கன்றி வேறொருவர்க்குச் சிறிதும் உளவாகா. கொம்பும், மயிருந் தாமரை மலரும் ஆடு, மாடு, கவரிமான், மடு, குளம் முதலான உள்பொருள்களில் இருத்தலைக் காண்பவர்க் கல்லால், ஏனை யோர்க்கு அவற்றைப்பற்றிய உணர்வும் நினைவுந் தோன்று தலைக் கண்டிலமன்றோ? மாயை யென்பது இல்பொருளாயின், அதன்கணிருந்துண்டாம் இவ்வுலகமும் இல்பொருளேயாயின், மெய் வாய் கண் மூக்குச் செவியென்னும் ஐம்புலன்களுக்கும் அது புலனாதல் இயலாதன்றோ? ஐம்பொறிகளுக்கும் புலனாக

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_28.pdf/300&oldid=1591636" இலிருந்து மீள்விக்கப்பட்டது