உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 28.pdf/301

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

276

  • மறைமலையம் 28

ததை உணர்தலும் நினைதலும் யாங்ஙனம் கைகூடும்? ஐம்பொறி களால் உணரப்படுவனவெல்லாம் வெறும் பொய்யே யெனின், ஐம்பொறிகளும் அவற்றின் வழிச்செல்லும் மனனும் மனத்தை இயக்கும் உயிருமெல்லாம் வெறும் பொய்யேயாய் ஒழிதல் வேண்டும். உயிர் பொய்யாய் ஒழிந்தவழி, உயிர் தன்னாற் காணப்படும் உலகினமைப்பைக் கொண்டு காணப்படாத கடவுளையறியும் அறிவும் பொய் யாய் ஒழியக் கடவுளும் பொய்யாகவே ஒழிதல் வேண்டும். இவ்வாறு எல்லாம் பொய்யாய் ஒழியவே, உயிர்கள் தமது நிலையையுந் தம்மொடு தொடர்புடைய பிறவுயர்களின் நிலையையும் உணர்தலும், உணர்ந்து ஒழுகுதலும், அவ்வாற்றால் விளையும் நல்வினை தீவினைகளும், அவற்றின் பயன்களும், அவற்றை நுகர்தற்குரிய இம்மை மறுமையுலகங்களும், அவற்றிற்கேற்ப வரும் பிறவிகளும், அவற்றைத் தருவதான முழுமுதற்கட இவைகளை ஆராயும் நூல்களுந், தவமுயற்சியும் பிறவு மெல்லாம் பொய்யாகவே ஒழிதல் வேண்டும்.

வுளும்,

புத்தரும் மாயாவதிகளும் ஒரு தினைத்தனைச் சான்று தானும் இன்றிச், செருக்கித் தாமாகவே படைத்திட்டுக கொண்டுரைக்கும் இப்பொய்யுரைக்கு இசையத் தமக்கு வேண்டுவனவற்றையெல்லாம் பொய்யாகக் கருதியொழுகு கின்றனரோ வென்றாற், சிறிதும் இல்லையே.

அடிக்குறிப்புகள்

1. அடிகளார் தம்முடைய உயரிய “அறிவுக்கடல்” என்னும் திங்கள் வெளியீட்டில் அவ்வப்போது வரைந்து வெளிப்போந்த “சிவஙானபோத ஆராய்ச்சி” என்னும் சிறந்த கட்டுரையினைப் பின்னர்த் தன்நூல் வடிவாகச் செப்பனிட்டெழுதி அரைகுறையாக உள்ளது இப்பின்னிணைப்பு

3.

4.

5.

6.

இங்ஙனஞ் செய்தார், சிவஞானபோதத்தைப் பாண்டிப் பெருமாள் விருத்தியுரையுடன் பதிப்பிட்ட திரு. சண்முகசுந்தர முதலியாராவர்.

See Sir John Marshall's “Mohenjo-daro and the Indus Civilization,” Vol. 1.

See "Dr. Caldwell's Comparative Grammar of the Dravidian Languages” 1st edition, 1856 page, 72.

“ஏவம் வித்யாச் சிவஞானபோதே சைவார்த்த நிர்ணயம்”

சிவஞானபோத ஆராய்ச்சி

- முற்றும் -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_28.pdf/301&oldid=1591637" இலிருந்து மீள்விக்கப்பட்டது