உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 28.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5

திருச்சிற்றம்பலம்

நூல்நுதலிய பொருள்

சைவசித்தாந்த சாத்திரம் பதினான்கனுட் சிறந்ததாயும், சிவஞானசித்தியார் சிவப்பிரகாசம் முதலான வழிநூல் புடைநூல்கட்கு முதனூலாயும், சுவேதவனப்பெருமாள் என்னும் பிள்ளைத் திருநாமம் உடைய ஆசிரியர் மெய்கண்ட தேவ நாயனாரால் ஞானபாதப் பொருளெல்லாஞ் சுருக்கிப் பன்னிரண்டு சூத்திரங்களிலே அருளிச்செய்யப்பட்டதாயும் உள்ள சிவஞானபோதநூல் உரையிடற்காகா அருமை பெருமை யுடையதாய் விளங்குகின்றது. இது தன்னைத் துறைபோகக் கற்றார் எல்லா நூற்பொருளும் ஒருங்கு ணர்ந்தாராய் மெய்ப் பொ ருளுறுதிபெற்று முதல்வன் றிருவடிப்பேற்றினைத் தலைப்படுவரென்பது துணிபாக லின், இதனைச் செவ்விதின் ஆராயப்புகுந்து முதற்கண் இந்நூலால் நுவலப்படும் பொருள் இவையென்பது விளங்க விரிப்பாம்.

மெய், வாய், கண், மூக்குச், செவி என்னும் ஐம்பொறி களானும் நுகரப்படுவனவாகிய ஐம்பெரும்பூதத் தொகுப் பாகும் இவ்வுலகங் காரணகாரிய நிலைகளிரண்டினும் உள்பொருளே யாமென்பதூஉம், இங்ஙனம் உள் பொருளாய் நிலைபெறும் இவ்வுலகத்தின்கட் கண்டுகேட்டு உண்டு உயிர்த்து உற்று அறிந்து வருவனவாகிய உயிர்கள் எண்ணிறந்த னவாய் என்றும் உள்ள அறிவுப் பொருள்களேயாம் என்ப தூஉம், அறிவுப் பொருளான இவ்வுயிர்கள் தம் இயற்கையிலேயே அறியாமை வயப்பட்டுத் தம் இயற்கையறிவு மழுங்கிக் கிடக்கக் காண்கின்றே மாதலால் இவை தம்மை அங்ஙனம் பொதிந்து இவற்றோடு ஒருமித்து நிற்கும் அறியாமை தொன்று தொட்டு உளதா மென்பதூஉம், இவ்வாறு அறியாமை வயப்பட்டு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_28.pdf/30&oldid=1591359" இலிருந்து மீள்விக்கப்பட்டது