உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 28.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6

மறைமலையம் - 28

மயங்கும் ஆருயிர்களை அதனினின்றும் விடுவித்து அறிவுறுத் தற் பொருட்டு அவை தமக்குப் பல்வேறு உடம்புகளையும், பல்வேறு உலகங்களையும் படைத்துக் கொடுப்பானான இறைவன் ஒருவன் உளனாமென்பதூஉம், இவ்வாறு

அவ்வுயிர்கள் உடம்புகளின் வழியாய் உலகங் களிலிருந்து தம் அறியாமை தேய இன்ப துன்பங்களை நுகரு மிடத்து ஆண்டுத் தோன்றுவது வினையாமென்பதூஉம், இவ்வினை நுகர்ச்சி யானே அறியாமை முற்றுந் தேய்ந்து ஒழிந்தவழி ஆண்டு அவ்வுயிர்கண் மாட்டு முன் சுருங்கிக் கிடந்த இயற்கை யறிவு விரிந்து விளங்க அதன்கண் முதல்வன் றிருவருட்பேரொளி ஒற்றித்து நின்று துளும்புமாகலின் அதுவே வீடுபேறாகு மென்பதூம் பிறவும் இதன்கண் இனிது விளக்கப்படும் அரிய பொருள்களாமென்க. எனவே, இவையெல்லாம் பதி பசு பாசம் என்னும் மூன்று சொற் கண்ணே அடங்கும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_28.pdf/31&oldid=1591360" இலிருந்து மீள்விக்கப்பட்டது