உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 28.pdf/304

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

279

மறைமலையடிகளைப் போற்றிடுவோம்

(எடுப்பு)

மறைமலை யடிகளைப் போற்றிடுவோம் - அவர் வழங்கிய உணர்ச்சியை ஏற்றிடுவோம்!-மறைமலை

(தொடுப்பு)

நிறைகுடம் எனும்புகழ் அறிவாளர்--அவர் நிகரிலாத் தனித்தமிழ் நெறியாளர்--மறைமலை

(முடிப்பு)

செந்தமிழ் இயக்கத் தந்தையவர்--என்றும்

சிவநெறி மறவாச் சிந்தையினர்;

சிந்தனைக் களஞ்சியம் எனநூல்கள்--பல தீட்டிய செழுந்தமிழ் முனிவரவர்--மறைமலை

சாகுந்தலந்தனைத் தமிழாக்கி--அவர் சாகாப் புகழினை ஏந்தியவர்

பாகும் தேனும் இணங்கிவரத்--தமிழ்ப் பண்குரல் விரிவுரை வழங்கியவர்--மறைமலை

ஆயிரம் ஆயிரம் நூல்களையே -- நன்கு

ஆய்ந்தவர் அவரோர் நூலகமே

தூயவர் பெயரால் நூலகமும்--நன்கு

துலங்கும் பெருமை சென்னையிலே--மறைமலை

முத்துமுத் தாம்அவர் கையெழுத்து; மிக

முதிர்ந்த வயிரம் அவர்கருத்து,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_28.pdf/304&oldid=1591641" இலிருந்து மீள்விக்கப்பட்டது