உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 28.pdf/305

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

280

மறைமலையம் - 28

முத்தமிழ் அறிவுக் கடல்எனவே--பல

முத்து மொழிகளை வழங்கியவர்--மறைமலை

எதிலும் ஒழுங்குமுறைகாட்டி--அவர்,

இலங்கிய புலமை வழிகாட்டி

பொதுநிலைக் கழகம் தலைக்கூட்டி--பெரும்

புலவரைப் போற்றிய மேதையவர்--மறைமலை.

கலைமாமணி புத்தனேரி. ரா. சுப்பிரமணியம் (மறைமலையடிகள் நூற்றாண்டு விழா மலர் பக்-33-34)

வாய்மை ஈதே!

நற்பேரும் புகழுமிகு மறைமலையார் தம்முடைய

நலமே சான்ற

சொற்போரின் பேராற்றல் துணிவுமிகு பேராண்மை

தூய நல்ல

முற்போக்குப் பெருங்கொள்கை முறைதிறம்பா ஆராய்ச்சி

எல்லாம் முன்னின்

மற்றவர்க்கு நிகரான மாபுலவர் எவருமிலர் வாய்மை ஈதே!

பழமைமிகு தமிழ்நெறியைப் பகுத்தறிவும் அறிவியலும் பரந்து யர்ந்த

விழுமியநற் பெரும்போக்கும் விரிந்தமனப் பான்மையுமே, மேவு வித்துச்

செழுமியநல் அடிப்படையில் சிறந்தநல்ல அமைப்போடும்

செழிக்கச் செய்தார்

தொழுதகைய பெரும்புலவர் தூயதமிழ் மறைமலையார்

சொல்வ தென்னே!

திரு. ந. இரா. முருகவேள்

(மறைமலையடிகள் நூற்றாண்டு விழா மலர் பக்-34)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_28.pdf/305&oldid=1591642" இலிருந்து மீள்விக்கப்பட்டது