உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 28.pdf/306

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவலர்கள் பார்வையில் மறைமலையடிகள்

281

முற்றிய புலமையாளர்

நம்மொழிப் புலமை யெல்லாம்

நடுத்தெருப் புலமை யாகும்

செம்மொழி பேசி வந்த

திருமறை மலையார் பெற்ற

மும்மொழிப் புலமை யன்றோ

முற்றிய புலமை அன்னார்

தும்மலும் கல்வித் தும்மல்

தூக்கமும் கல்வித் தூக்கம்

பாவலர். சுரதா

(மறைமலையடிகள் நூற்றாண்டு விழா மலர் பக்-35)

இவர் இல்லையேல் காவலேது?

தமிழ்மட்டும் படித்தவர்கள் தமிழைச் சொன்னார்

சமற்கிருதக் காரர்களோ தம்மைச் சொன்னார்

அமைதிறிநை மறைமலையார் இரண்டுங் கற்று

ஆம் உண்மை தமிழ்க்கடலே உயர்ந்த தென்றார்

உமிமூடி இருந்தாலே நெல்தான் என்றே

உரைத்தவர்க்குப் பதரென்ன என்று சொன்னார்

இமை இன்றேல் விழிகட்குக் காவல் ஏது?

இவர்இலையேல் அன்றக்ைகுக் காவல் ஏது?

- பாவலர் கா. வேழ வேந்தன்

(மறைமலையடிகள் நூற்றாண்டு விழா மலர் பக்-35)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_28.pdf/306&oldid=1591643" இலிருந்து மீள்விக்கப்பட்டது