உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 28.pdf/307

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

282

மறைமலையம் - 28

சிறப்பெல்லாம் கொண்டார்

பேச்சாளர்; பனித்தமிழின் பெருமை தீட்டும் புதுநடைசால் எழுத்தாளர்; பிறர்தி ணிப்பின் பாய்ச்சலினைத் தகர்க்கின்ற மறவர்; இன்பப்

பைங்கதைகள் சொல்கின்ற நல்ல அன்னை;

மூச்சாகும் தனித்தமிழின் தந்தை; பாக்கள்

முழுச்சுவையாய் வழங்கியஓர் வள்ளல்; காழ்ப்புக்

காய்ச்சலினை நலமாக்கும் மருந்துக் காரர்;

கரைகண்ட மும்மொழியின் அருமைச் சித்தர்; மறைமலைபோல் உயர்ந்திருந்தார்; ஆனால் ஒன்றி, மாந்தர்தம் கைக்(கு) எட்டும் முறையிருந்தார்; நிறைமலை யாய் வாழ்பரப்பில் மேன்மை கண்டார்; நெடுவிலங்கு உறைபாங்கு கொண்டா ரில்லை;

இறைஅடிகள் எனுமாறு சிறப்புப் பெற்றார்;

இஞ்ஞால நன்மைகளைக் குறைக்க வில்லை;

முறைபெயரில் நூலகமும், நகரும், பாலம்

பின்தோன்றச் சிறப்பெல்லாம் கொண்டார் வாழி

- புலவர் நா. இராசகோபாலன்

(மறைமலையடிகள் நூற்றாண்டு விழா மலர் பக்-35-36)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_28.pdf/307&oldid=1591644" இலிருந்து மீள்விக்கப்பட்டது