உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 28.pdf/308

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவலர்கள் பார்வையில் மறைமலையடிகள்

283

கதிரவன் போல வாழ்க!

செந்தமிழின் தனிமாண்பைத் திசைக ளெட்டும்

செஞ்சுடர்போல் பரப்பியிருட் பகையை வென்று

சிந்தையொளி நல்குதிரு வாசகத்தின்

செழும்பொருளைச் சித்தாந்த சைவத்தோடு

முந்தியதொல் லறிவாளர் போற்றத் தந்த

முத்தமிழ்மா முனிவன்செந் தமிழ்த்தாய் வாழ

வந்தமறை மலையடிகள் பன்னூ லாசான்

மரபொடுமாண் புகழ்ஓங்கிக் கதிர்போல் வாழி.

தலைவர் : கரந்தைத் தமிழ்ச் சங்கம்

(மறைமலையடிகள் நூற்றாண்டு விழா மலர் பக்-36)

வாய்மை காத்த மறைமலை

வாழ்வியல் அறிந்த மேதை;

மனத்தினில் பட்ட உண்மை

தாழ்வுயர் வெண்ணம் இன்றிச்

சாற்றிய மேன்மையாளன்

மாழ்குறும் மனித மேன்

மறையினும் மறையா சீர்த்தி

வாழ்வினைப் பெற்ற மன்னன்

மறைமலை அடிகள் அன்றோ?

- புலவர் பண்ணை சண்முகம் தமிழக மறுமலர்ச்சியின் தந்தை சுதந்திரன் வெளியீடு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_28.pdf/308&oldid=1591645" இலிருந்து மீள்விக்கப்பட்டது