உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 28.pdf/309

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

284

மறைமலையம் - 28

மறைமலையே வாழி!

வருக தமிழன்னை மாண்பார் அருளே உருவாகி வந்த ஒருவ -- பெருவாழ்க்கை

உற்ற தொருகுடியில் ஓங்குமில் வாழ்வெல்லாம் பெற்றும் அவைதுறந்த பெம்மானே -- மற்றுலகில் இல்லை கலைகளிவன் ஏய்ந்தகல் லாதவென வல்லாரும் போற்றுகலை மாமணியே--எல்லையறு செந்தமிழிற் பல்வகையாய்ச் சேர்துறைகள் எவ்வெவற்றும் முந்து பெரும்புலமை முற்றியோய் வந்த

உரையார் வடநூலில் ஓங்காங்கி லத்தில் வரையாப் பெரும்புலமை வாய்ந்தோய்--வரைநின் எழுத்தின் தனிச்சீரை எவ்வழியுந் தேர்ந்து வழுத்தாதார் யாரிந்த மண்ணில்--பழுத்துமிகு மெல்லினிமை சான்றுமணம் வீசுங் கனியினையும் வெல்லும் உரைநடையை வேண்டாரார்--மல்கு பெருநூல் எதற்கும் பிறழா துரைக்கும்

பொருளின் வளமெவரே போற்றார்--தெருளார்ந்த

மேலைப் புலத்தோரும் மெச்ச வியற்றும்நின் நூலின் பெருஞ்சீர் நுவலாரார்--சாலப்

பெருகும் அவைக்கண்ணின் பேருரைகள் கேட்டே

உருகி நிறைமகிழ்தம் உள்ளம் மருவினராய் வானின் அமிழ்தே மலையத்தென் காலேநல்

தேனருவி யேஎன்னச் செப்பாரார்--மேனிலைசேர்

கல்லூரி போற்றுங் கணக்காயர் ஆகியநாள்

சொல்லின் திறனோர்ந்து சொல்லாரார்--பல்வளஞ்சேர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_28.pdf/309&oldid=1591646" இலிருந்து மீள்விக்கப்பட்டது