உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 28.pdf/310

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவலர்கள் பார்வையில் மறைமலையடிகள் முல்லையொடு பாலையினில் முற்றியநின் ஆய்வுரையை நல்லிசையோர் தம்முள் நயவாரார்--தொல்லடிகள் மாணிக்க வாசகனார் வாழ்க்கைவிரி நூல்கண்டு நாணிக்கண் கூசாத நண்ணாரார்--ஆணிப்பொன் அன்ன சிறப்பினவாய் ஆக்குநூல் ஆக்கமெலாம் எண்ணித் துணிதற் கியலாகித்--துன்னும் நினதுரை நூலாகும் நீள்கடலை நீந்திப் புனைவதற் கார்வல்லார் புவியில்--இணையில்லாச்

சைவத் துறையின் தகுசீர் அவையெல்லாம் எவ்வெவர்க்கும் ஊட்டும் இணையிலாய்-- இவ்வுலகில் செல்வர்யாம் என்னச் செருக்கும் சிலவரைப்

புல்லுதுக ளாக்கொள் பொற்போனே--பல்வழியில் தம்மை மதியாரைத் தாமதியா நன்மானம் இம்மை எவர்க்கும்முன் ஏய்ந்தோனே--செம்மையெலாம் தங்குங் கரந்தைத் தமிழ்ச்சங்கத்(து) எந்நாளும் பொங்குந் தனியன்பு பூண்டோனே--திங்கள் நிறைநிலையே யென்ன நிலவிப்பல் லூழி மறைமலையே வாழி மகிழ்ந்து.

285

கரந்தைக் கவியரசு அரங்க வேங்கடாசலம் பிள்ளை (மறைமலையடிகள் நூற்றாண்டு விழா மலர் பக்-38-39)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_28.pdf/310&oldid=1591647" இலிருந்து மீள்விக்கப்பட்டது