உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 28.pdf/311

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

286

மறைமலையம் - 28

மறைமலையார் புகழ்வாழி

அறிவினொரு கடலெனவே

அனைவருளம் மகிழ்ந்தேத்த

செறிவினொடும் அகற்சிநுட்பம்

சேர்ந்தமைந்த புலமையினார்

நெறியுறவே தனித்தமிழை

நேர்நின்று காத்தளித்தார்

மறிவில்லாத் தமிழ்ச்சான்றோர்

மறைமலையார் புகழ்வாழி.

டாக்டர் மு. வரதராசனார்

(மறைமலையடிகள் நூற்றாண்டு விழா மலர் பக்-39)

வெளியிடல் கடனே

மறைமலை அடிகள் த்மிழ்மொழிக் குழைத்த மாண்பினை மகிழ்வுடன் நினைந்து

துறைதொறும் தமிழர் தமிழ்மொழி பேணித்

தொன்மையின் செம்மையை உணர்ந்து

நிறைபொறை நேர்மை நெறிமுறை நீதி

நீர்மையும் சீர்மையும் மருவிக்

கறைபடி யாமல் வரும்படி மலரைக்

கருதிநேர் வளியிடல் கடனே.

புலவர் செகவீரபாண்டியனார்

(மறைமலையடிகள் நூற்றாண்டு விழா மலர் பக்-39)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_28.pdf/311&oldid=1591648" இலிருந்து மீள்விக்கப்பட்டது