உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 28.pdf/312

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவலர்கள் பார்வையில் மறைமலையடிகள்

287

தமிழ்ப் பண்பு

மறைமலையைக் கலைக்கடலை மதிக்கொழுந்தை அக்கொழுந்தின் வனப்பை வைப்பை முறைதிறம்பாச் சிவப்பணியை முகநூல்கள்

பலவிளைத்த முகத்தை அன்பின்

உறையுளைநற் றமிழ்ப்பண்பை உணர்ச்சியினை ஊக்கத்தை ஊதி யத்தைக்

குறைவின்றி யினிப்பெறுநாள் கூடுங்கொல்

அறிவுடையீர் கூறு

வீரே!

வித்துவான் மு. அருணாச்சலம் பிள்ளை

(மறைமலையடிகள் நூற்றாண்டு விழா மலர் பக்-39-40)

கலைகளெல்லாம் அறிந்த தெய்வம்

ஏராணத்தில் இலக்கணத்தில் இலக்கியத்தில்

சான்றோர்தம் இனிய பாவில்

காரணத்தை நுதலிவரும் சித்தாந்த

முதலான கலைகள் தம்மில்

ஆரணத்தைத் தலையாக்கொள் ஆரியத்தில்

சங்கதமத்தில் ஆங்கிலத்தில்

சீரணைத்த கலைகளெல்லாம் அறிந்த தெய்வம்

நீயன்றித் தெரியக் காணேம்.

புலவர் வீ. உலகவூழியனார்

(மறைமலையடிகள் நூற்றாண்டு விழா மலர் பக்-40)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_28.pdf/312&oldid=1591649" இலிருந்து மீள்விக்கப்பட்டது