உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 28.pdf/317

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

292

மறைமலையம் - 28

நிலைத்தது நிறைதமிழ்

கரவியல் நெஞ்சக் கனலிடைச் சுட்டுக் கனித்தமிழைப் பரவிய மாந்தர் பதைப்புற, தேர்ந்தோர் பவளமணி விரவிய கோவை விலக்குதல் பேல வியன்றமிழுள் அரவியற் சொல்லாம் அயற்சொற் களைந்தார் அடிகளாரே!

(1)

அடிகளார் பன்மொழி ஆய்ந்து பயின்றே, அயலவர்சொற் பிடிகளால் எம்மொழிப் பீடும் சிதையும் பிழைமனத்துக் குடிகளால் மாண்பு குலையும் அரசியற் கூத்தெனவே, இடிகளால் குன்றா இயக்கம் வகுத்தே இயக்கினரே!

(2)

இயக்கம் உணரா இனத்தார் கொடுத்த இடரொதுக்கி மயக்கந்தெளிய மருந்தாய் விளங்கி மறைமலையார் வியக்கும் பகைவர் விலகி மறைய வெருட்டியதால் பயக்கும் அழியாப் பயன்றான் தமிழின் பரப்பளவே! பரப்பை அளந்து பகர வியலாப் படர்விசும்பை

(3)

வரப்புக் கட்டி வளைப்பேன் என்னும் வழக்குரைஞர்

கரப்பை – அவர் தங் கயமைக் கருத்தைத் கருவழித்தே, இரப்பை பிறமொழி ஏற்பை - முழுதும் இகழ்ந்தனரே! இகழ்ந்து தமிழை இழிமொழி யென்ற இருண்மதியர் அகழ்ந்தாய்ந் துரைத்த அறிஞர் அடிகளார் அடிவருடிப் புகழ்ந்தார், பல்லோர் புறமோடிப் போனார், பொலபொலென நிகழ்ந்தது வெற்றி நிலைத்தது நந்தாய் நிறைதமிழே!

(4)

(5)

- தரங்கை – பன்னீர்செல்வன்

(மறைமலையடிகள் நூற்றாண்டு விழா மலர் பக்-26-27)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_28.pdf/317&oldid=1591655" இலிருந்து மீள்விக்கப்பட்டது