உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 28.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிவஞான போத ஆராய்ச்சி

9

ஆசிரியன் அறிவுறுத்தலானும் அறிவுடையராய்ப் போதுகின்ற ஆன்மாக்கள் போலாது அறிவே உருவாய்த் தன்னியல்பிற் பிரகாசித்தலாம்." பரமான்மா சீவான்மா இரண்டும் பண்டு தொட்டுத் தொடக்கமும் ஈறுமின்றி நிலைபெறும் அறிவுப் பொருள்களாயினும், அவை அவ்வாறு ஒருங்கு நிலையுறுதல் பற்றியே சமமாவான் செல்லுதலில்லை. பரமான்மா இயற்கை யறிவு விளக்கமுடையதாகும்; சீவான்மா இயற்கை யறிவு மழுக்கமுடையதாகும். பரமான்மா அவ்வாறு இயற்கையே அறிவு விளங்கப் பெறுதல் எற்றாற் பெறுது மெனில்;-- சீவர்கள் முறை முறையே அறிவு விரிதரப் பெறுதலானும், இயற்கை யிலேயே அறியாமை வயப்பட்டு மயங்கு வாரான அவர் தாமே தமக்கு அறிவுறுத்திக் கொண்டு அறிவுடைய ராதல் கூடாமை யானும், அவர்க்கு அறிவு தருதற்குக் கடவுளையன்றிப் பிறி தொரு பொருள் காணப்படாமையானும், அங்ஙனமவர்க்கு அறிவுதருதல் வல்லதான அப்பரம்பொருள் தானியற்கையே அறிவுடைய தாயிருந்தாலல்லது தானது தருதன் மாட்டாமை யானும், அப் பரம்பொருட்கும் அங்ஙனமே அறிவு விளக்குவ தொன்றுண்டென்பது எவ்வாற்றானும் பெறப்படாமை யானும் பரமான்மா இயற்கை யறிவுடைத் தென்பது துணியப் படுமென்க.

இனி முற்றுமுணர்தல் என்பது "இறைமுதற்பொருள் தன் வியாபகத்தினுட் கிடக்குஞ் சீவர்கள் நிலையினையும் ஏனைப் பொருள் நிலையினையும் ஒருங்குணர்ந்து நிற்றல்,” சீவர்கட்குரிய சிற்றுணர்ச்சிபோல, முதல்வற்குரிய முற்றுணர்ச்சி காலத் தினால் வரையறுக்கப்படுவதன்று, சீவர்கள் யாம் நேற்று அறிந்தேம், இன்று அறிகின்றேம், நாளை அறிவேம் என்று கூறுவர். நேற்றறிந்தேம் என்ற வழி அதற்கு முன்னை நாள் அறிந்திலம் என்பதும், இன்றறி கின்றேம் என்கின்றவழி நேற்றறிந்தில மென்பதும், நாளை யறிவேம் என்னும் வழி ள நேற்றுமின்று மறிந்திலமென்பதும் இனிது பெறப்படுமாகலின், காலத்தினால் வரையறுக்கப் படும் அறிவு சிறுவரைத்தாதலும் அது முன் அறியாமை வயப்பட்டு நின்றபடியும் புலனாம். இன்னும் முதல்வற்குரிய வுணர்ச்சி சீவர் களுணர்ச்சி போல டத்தானும் வரையறுக்கப் படுவதன்று. மாளிகையினை

வு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_28.pdf/34&oldid=1591363" இலிருந்து மீள்விக்கப்பட்டது