உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 28.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10

மறைமலையம் - 28

மு

அறிகின்ற சீவர் மலையினை மறத்தலும், மலையினையறிபவர் மாளிகையினை மறத்தலும் கடலை யறிபவர் நிலனை மறத்தலும், நிலனையறி பவர் கடலை மறத்தலுங் காணப் படுதலின் ஓரிடத்தை முனைந்துணருங்கால் மற்றொன்று உணரப் படாமை தெளிவாய் விளங்கும். இது போலவே இறைவனும் ஒவ்வொரு பொருளாய் உணர்வ னெனின், ஒன்றை உணர்ந்து, பிறி தொன்றை மறந்தொழி வனாவனென்றாம். ஆகவே, சிற்றுணர் வினரான மக்களோடு ஒப்பவைத் தெண்ணப்படும் ஆகலின் அஃதிறை வற்குக் குற்றமாதல் காண்க. தனானே, றை வற்குரிய முற்றுணர்ச்சி காலத்தானும் இடத்தானும் வரையறுக்கப் படுவதின்றி அவற்றையும் அவற்றினுட்பட்ட குணரும் இயற்கைத்தாமென்க.

எல்லாவற்றையும்

ஒருங்

அம் முற்றுணர்ச்சி புடை பெயர்ந்தறிவதன்று; தன்கண் எல்லாப் பொருள்களும் பளிங்கினுள் விளங்கும் வண்ணம் போலத் தாமே தோன்று மென்றறிக. இன்னும் அளவிறந்த உயிர்த் தொகுதிகளையும் அளவிறந்த அண்டத் தொகுதி களையும் முழுதும் நடைபெறு வித்தற்கு அவற்றினெல்லாந் தான் ஒருமையுற்று நிற்றல் வேண்டுதலின், முதல்வனது சருவவியா பகத்துவம் முற்றுணர் தலாகிய சருவஞ்ஞத் துவத்துள்ளே அடங்கும். யாண்டும் நிறைந்து நின்றாலல்லது ஆங்காங்கு நிலைபெறும் உயிர் வருக்கங்களியல்பும் அவற்றைப் பொதிந் திருக்கும் அறியாமை யினியற்கையும் அறிதலாகா மையின் முற்றுணர்தல் முற்று நிறைதலிரண்டுந் தம்முளியைபு உடை யவா மென்க. அற்றன்று, அரசன் தான் ஓரிடத்திருந்தே தன் செங் கோல் நிழற்கீழ் ஒதுங்கும் ஞாலத்தின்கண் நிகழ்வன வற்றை அறிதல் போல, முதல்வனுந் தான் ஓரிடத்து ஏகதேசியா யிருந்தே தன் ஆணைவழி நடைபெறும் எல்லா உலகங்களின் றன்மையும் எல்லா உயிர்களின் றன்மையும் அறிதல் செய்வா னென்று கோடு மெனின்;- அறியாது கூறினாய், அரசன் தான் ஓரிடத்திருந்தே எல்லாம் அறிய மாட்டுவான் அல்லன்; தன்கீழ் அதிகாரிகள் பலப்பலரை ஆண்டாண்டு இருத்தி அவர் முகத்தான் அறிந்து போதருவன். அறியாமை வயப் பட்டு மயங்கும் உயிர்களை யறிவுறுத்துகின்ற இறைவற்கு அங்ஙனம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_28.pdf/35&oldid=1591364" இலிருந்து மீள்விக்கப்பட்டது