உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 28.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிவஞான போத ஆராய்ச்சி

11

முறைமுறையே உணர்த்துவார் பிறரின்மையின் அவ்வுவமை ஈண்டைக்குப் பொருந்தாதென விடுக்க. அற்றன்று, அறிவு முதிர்ச்சி பெற்ற உயிர்களை ஆங்காங்குத் தன் கீழ்த் தலைவர் களாக நிறுத்தி அவர் வாயிலாற் பிரபஞ்சசிருட்டி முதலாயின நடாத்தி அறியுமென்று கொள்ளாமோவெனின்;-- தன்கீழ்த் தலைவர்களாக நிறுத்தப்படும் மற்றவர்க்கும் அறிவில்லாத முற்பருவத்திலே அவர் தமக்கு அறிவு கொளுத் தியவாறும், ஏனையுயிர் உலகங்களை யறிந்தவாறும் யாங்ஙனம் என்று கடாவு வார்க்கு விடுக்குமாறென்னையோ வென்பது. அவ்வாறன்று, ஏகதேசி யாயுள்ள தன் பக்கத்தே அறிவின்றிக் கிடந்த உயிர்களை உயிர்களை முதன்முதல் அறிவுறுத்திக் கிடந்த உயிர்களை முதன்முதல் அறிவுறுத்திப் பின்னர் அவர் தம்மாற் பிரபஞ்ச சிருட்டி நடத்துமென்றலே எமது கோட்பாடாம் பிற வெனின்;-- தன்னைப் போலவே ஏகதேசிகளாயிருந்து ஐந்தொழில் நடாத்தும் உயிர்களுக்கும் தனக்கும் வேறு பாடில்லாமையின், அவ்வுயிர்கள் தன்னோடு

ணங்காமல்

L மாறுபட்ட விடத்து அவரைத் தன் வயப்படுத்த மாட்டாமை யுண்டா மாதலால் அவ்வாறு கூறுதல் முதல்வன் இறைமைக் குணத்திற்கு இழுக்காமென்க. அங்ஙனமன்று, முதல்வனுக்கு அளவில்லாத ஆற்றலுண்டென்று கோடுமாகலின் உயிர்கள் முரணியவிடத்து அவர் தம்மை ஒறுத்தடக்கித் தன்னிச்சை வழியே நிறுத்துக் கொள்ள மாட்டுவானெனின்; அதுவும் பொருந்தாது. ஏகதேசியாய் ஓரிடத்தே மாத்திரமிருந்து ஒரு சிலவற்றையே அறிவித்தலும் ஒரு சிலவற்றையே அசை வித்தலுஞ் செய்தற் குரியனான ஒருவனைப் பலவிடங் களினும் நிறைந்து கிடப்பாரான அறிவுடையுயிர்கள் ஒருங்கு சேர்ந்து வென்று அவன் ஆட்சியுரிமையினைக் கொள்ளுதல் எளிதிலே கைகூடற்பால தொன்றாகலானும், சருவவியாபி யாய் யாண்டும் நிறைந்து நின்று எல்லாவுலகங்களையும் அசைவித்தலும் எல்லாவுயிர்களையும் அறிவித்தலுமே அளவிலாற்ற லெனப்படு மல்லது ஒரு காலத்து ஓரிடத்து மாத்திரம் இருக்க மாட்டு வானாய் ஒரு சிலவற்றை மாத்திரம் இயக்குவானை அளவிலாற்றல் உடையனென்றால் ஒருவாற் றானும் பொருந் தலின்மையானும் அவ்வாறு கோடல் யாண்டையதென் றொழிக. இன்னுமிதுபற்றி வருங்கடாவும் அதற்கு விடையுமாய்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_28.pdf/36&oldid=1591365" இலிருந்து மீள்விக்கப்பட்டது