உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 28.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12

மறைமலையம் - 28

வரும் விரிவெல்லாம் சிவஞான போத அகலவுரையின்கட் காட்டுவாம், ஈண்டுரைப்பின் விரியும். இவ்வாற்றால் இறைவன் முற்றுணர்ச்சிக்குச் சருவவியாபகத் துவம் இன்றியமையாத அங்கமாதலின், அம் முற்றுணர்ச்சிக் கண் இஃதடங்குதல் கண்டு கொள்க.

66

என்பன

இனி இயல்பாகவே பாசங்களினீங்குதல் என்பது 'தன்னியற்கையே பாசங்களின் விடுபட்டு நிற்றல்.” பாசம், கட்டு ஒரு பொருட் கிளவிகள். ஆ ன்மாக்களை இயற்கையிலேயே சிறைசெய்து அவரறிவைக் கட்டி நிற்றலின் அறியா மையிருள் பாசம் என்று பெயர் பெறும். ஒவ்வொரு பொருட்கு முள்ள இயற்கைத் தன்மையை மாற்றுதல் யாரானும்

காது. நீரின்றண்மையும் அனலின் வெம்மையும் யாரானும் மாற்ற முடியா. இயற்கையிலேயே அறிவுருவாய் விளங்கும் முதல் வனைக் கவிந்து பற்றுதற் குரிய தன்மை பாசத்தின் கண் இன்றாய்ச் சீவான்மாவைப் பற்றுதற்கியைந்த அளவான் மாத்திரம் அதன்கண் அவ் வாற்றல் நிலைவதாயிற்று. அஃதப்

பாருட் குள்ள யற்கையாம். பளிங்கில் ஒருருவந் தோன்றுதலும், முருட்டுக் கருங் கல்லில் அது தோன்றாமையும் என்னை யென்று நுணுகி யாராய்வார்க்குப் பொருளியற்கை இனைத்தென்றல் நன்கறியப்படும். இன்னும் இவற்றின் விரிவெல்லாம் முன்னர்ச் சூத்திரவாராய்ச்சியுட் காணப்படும், ஆண்டுக் கண்டு கொள்க. இதனானே, ஒன்றாற் சிறைபடாது அகன்று திவ்விய அருண்மயமாய் விளங்கு மியற்கை முதற்பொருளின் கட் சமவாயமா வுண்டென்று அறிக.

இனிப் பேரருளுடைமை என்பது “அறிவுப் பொருள் களான உயிர்த் தொகுதிகள் தம்மியற்கையறிவு சுருங்கிப் பேரின்ப நுகர்ச்சிப்பேறு எய்தற்கு உரிமையிலராய் வருந்து தலைக் கண்டு அவர்கட்குப் பாசக்கவிப்பினை விலக்கிப் பேரின்பந் துய்ப்பித்தல் வேண்டுமென்று எழும் இரக்கம் உடைமையாம்.” இவ்விரக்கம் இல்வழி உயிர்கட்கு அறியாமை நீக்கமும் அறிவுப் பேறும் நிகழா. உலகத்து இரக்கமுடையார் பிறர் நோயானும் வறுமையானுந் துன்புறுவது கண்டவழி மனமிளகி அவர்க்குதவி புரியக் காண்கின்றேம்; அவ்விரக்க மில்லார் பிறர் எங்ஙனமாயினும் எமக்கென்னை என்று வறிது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_28.pdf/37&oldid=1591366" இலிருந்து மீள்விக்கப்பட்டது