உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 28.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14

மறைமலையம் - 28

இனி, முடிவிலாற்றலுடைமை என்பது மை என்பது "அறிவித்தா லன்றித் தாமே அறிய மாட்டாத சீவர்களையும், அசைவித்தா லன்றித் தாமே அசைய மாட்டாத பிரபஞ்சங்களையும் ஒருகாலத் தொருங்கே அறிவித்தற்பொருட்டும் அசைவித்தற் பொருட்டும் வேண்டப்படுவதாகிய ஒரு பேராற்றல் உடையனாதல்.” ‘ஆற்றல்' எனினும் ‘சக்தி’ எனினும் ஒக்கும்.

ஃது ஒரு பொருட்கண் இயற்கையாய்ப் பிரிவின்றி நிலை பெறுவதொன்றாம். அறிவுப் பொருள் அறிவில் பொருள் ஆகிய அனைத்தும் ஆற்றல் உடையனவேயாம். ஆற்றல் திரண்டமயமே பொருள் என்பது அறியற்பாற்று. ஆன்மாக்க ளுக்கு அறிதற் றொழில் ஓராற்றலாம்; காந்தக் கல்லுக்கு இழுத்தற் றொழில் ஓராற்றலாம். ஆன்மாவின் அறிவை இல்லையாகச் செய்தல் ஒருவாற்றானும் ஏலாததொன்றாம். அவ்வாறே காந்தக் கல்லின் கண் இயற்கையாயுள்ள இழுத்தற்றொழிலைப் பிளவுபடுத்து அழித்தலுங் கடை போவதன்று. ஆன்மாவின்கண் உள்ள அறிவாற்றால் தன்னான் அறியப்படும் பொருள் இல்வழித் தோன்றாது. காந்தத்தின் கண்ணதாகிய ஆற்றல் தன்னான் இழுக்கப்படும் இரும்புத் துண்டு காணாவழித் தோன்றாது. ங்ஙனம் இவ்விருதிறப் பொருட்கண்ணும் நிலை பெறும் ஆற்றல் புலப்படத் தோன்றுதலுந் தோன்றாமையுமாகிய இரு நிலைமையுமுடைத்தாயினும் அஃது அவ்வப் பொருளினின் றும் வேறுபடுதல் இல்லையென்பது திண்ணம். இனி ஆற்றல் என்பது தான் யாதோவெனின்;-- இயக்கமின்றிக் கிடப்ப தொன்றை இயக்குதலும், இயங்குவ தொன்றை மறித்து நிறுத்துதலும் செய்வதொரு வினையாம். இவ்வாற்றலி னுடைய சுருக்க பெருக்கங்கள் அதனான் உய்க்கப்படும் பொருட் பரிமாணம்பற்றி நன்குணரப்படும். சிறியதொன்றை நடத்துவது சிறியவாற்றல் எனவும் பெரியதொன்றை நடத்துவது பெரிய ஆற்றலெனவும் அளந்தறியப்படுதலின், ஈண்டு முடிவிலாற்றல் என்பது தன் பெருக்கம் இனைத் தென்று வரம்பறுத்துணர லாகாத ஆற்றல் என்றபடியாம். சீவர்களறிவினான் அறிந்து அளவிடப்படாத அண்ட கோளங்களையும் அவ்வண்டங்களுள் நிலைபெறும் ஆன்ம கோடிகளையும் வினைப்படுத்து வருகின்ற இறைவ னுடைய ஆற்றல் முடிவறியப்படாத தொன்றாயிற்று. ஓராற்றலின் பெருக்கத்தை அறிதற்கு அது தன்னாற்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_28.pdf/39&oldid=1591368" இலிருந்து மீள்விக்கப்பட்டது