உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 28.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிவஞான போத ஆராய்ச்சி

15

செலுத்தப்படும் பொருட் பரிமாணவுணர்ச்சி இன்றியமையாத தாகலின், அண்டங்களின் தொகையும் அவற்றின் அளவும் அவற்றின் இயற்கையும் உணர்ந்தன்றி அவற்றை இயக்கும் இறைவன் பேராற்றல் அறியப் படுவதில்லை என்க. இனி ஆற்றலிலக் கணம் இதுவாதல் உணர மாட்டாதார் இல்ல தாரு சூன்யத்தினின்றும் உள்ள தொன்றனைத் தோற்று வித்தலும், உள்ள தொன்றனை இல்லதொரு சூனிய மாகத் திரித்தலுமே முடிவிலாற்றல் ஆம் என்று தமக்குத் தோன்றிய வாறே கூறுப. முக்காலத்தினும் இல்லதான சூனியத்தினின்றும் ஒன்றனைத் தோற்றுவித்தலும், அங்ஙனந் தோற்றுவித்ததனைத் திரும்பப் பாழாக்கலும் ஒருவாற்றானும் முடியாவென்பது பொருளியல் நூன் முடிபாகலின் அஃது ஒரு சிறிதும் பொருந்தா தென்று மறுக்க. சிருட்டி என்பது மிகச் சூக்குமமாய்க் கிடந்த அணுக்களை இயைத்துத் தூலவுருவாக்கல்; திதி என்பது அங்ஙனஞ் சிருட்டித்ததனை நடைபெறுவித்தல்; சங்கார மென்பது ‘தூலவுருவாய்த் திரண்ட அணுக்களைப் பிரித்து நெகிழ விடுதல்;' இங்ஙனமாகலின், இறைவன் நடாத்துந் தொழில் உள்பொருட் அன்றென்பது கடைப்பிடிக்க. இன்னும் அதுபற்றியறியற் பாலனவெல்லாம் ஞானசாகர முதற் பதுமத்தில் 'உள்ளது போகாது இல்லது வாராது' என்பதன்கட் காட்டினாம்; ஆண்டுக் கண்டு கொள்க. இவ்வாற்றால் முதல் வனுக்கு எண் குணமுடைமை ஓரிலக்கண மாதல் ஒருவாறு காட்டப்பட்டது.

கண்ணன்றி இல்பொருட்கண்

இனிக் கேவலாத்துவிதிகள் எனப்படும் ஒரு சாரார் பிரமப் பொருள் குணமுடைத் தன்றெனக் கூறுவர். உள்ள தொரு பொருளும் அதன்கண் ஒற்றித்துத் தோன்றுங் குணமும் வேறன்மையின், பொருளென்றன் மாத்திரை யானே அது குணமுடைத் தென்பது தானே பெறப் படுமென்க. அற்றன்று, பிரமம் குணமிலதென்றே சாதிப்பா மெனின்;-- அங்ஙனம் குணமின்மையும் பிரமத்திற்கொரு விசேட குணமா மாதலானும் அதனைப் பிரமம் எனப் பதத்தாற் பெயரிட்டு வழங்குதலும் அதற்கொரு குணமாய் முடிந்திடுதலானும் நீ கூறுவது காண்டே பிரமங் குணமுடைத்தென்பது பெறப்படுமென விடுக்க. அற்றேல், உபநிடத நூல்களில் ஒரோவழிப் பிரமம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_28.pdf/40&oldid=1591369" இலிருந்து மீள்விக்கப்பட்டது