உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 28.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16

  • மறைமலையம் -28

நிர்க்குணமெனக் கிளந்து கூறப்பட்டவா றென்னை யெனின்;-- மாயையினு டைய சம்பந்தத்தால் உயிர்கள் மாட்டு உண்டாம் சத்துவம், இராசதம், தாமதம் முதலிய குணங்கள் இறைவன் மாட்டும் உளவாமோ வென்னும் ஐயம் நீக்குதற் பொருட்டுப் 'பிரமம் நிர்க்குணம்' என்னும் வாக்கியவுரை எழுந்ததென உணர்க. பிரமமென்பது இல்லதொரு சூனியமாயின் அது குண முடைத்தன்றெனக் கூறுதல் பொருந்தும், என்னை? ஆகாயத் தாமரை, முயற்கொம்பு என்ற வழி அச்சொற்களாற் குறிக்கப் படும் பொருள்களில்லாமையின் தாமரைத் தன்மையுங் கொம்பின்றன்மையும் ஆண்டு இலவாம்; பிரமம் அவை போற் சூனியப் பொருளென்பது அவர்க்குக் கருத் தன்மையின் பிரமங் குணமில்லதெனக் கூறும் அவருரைக்குப் பொருளில்லை யென்க. பிரமம் உள் பொருளாய்க் குணமுடைத்தாதல் பற்றியன்றே தெய்வப் புலமைத் திருவள்ளுவ நாயனார் “எண் குணத்தான் றாளை வணங்காத் தலை” என்று அருளிச் சய்வாராயினர். திருக்குறளின் மேற்பட்ட பிராமணநூல் உலகத்தின்மையின், இவ்வருமைத் திருவாக்கிய வுரையோடு முரணி எவர் யாது கூறினும் அஃதெல்லாம் பிரமாணமாதல் இல்லையென் றொழிக.

L

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_28.pdf/41&oldid=1591370" இலிருந்து மீள்விக்கப்பட்டது