உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 28.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

17

2. பசு

இனிப் பசுவென்பது ஆன்மா ஆன்மாக்கள் எண்ணிறந் தனவாம். இதற்குப் பிரமாணம் என்னை யெனின்;-- ஒருவர்க்கு ஓர் இன்பதுன்பம் நிகழுங்காலத்துப் பிறர்க்கும் அது தோன்றா மையானும், 'நான் இது செய்தேன்' பிறர் அது செய்தார் என்னுஞ் சொல் வழக்குக் காணப்படுதலானும் காண்டல ளவையே பிரமாணமென்க. இஃதுணராத ஏகான்மவாதிகள் சூரிய விம்பங் கடங்கள் தோறும் வேறு வேறாய்த் தோன்றுதல் போல ஆன்மா வொன்று தானே சரீரங்கள் தோறும் வவ்வேறாய்த் தோன்றும் எனவும், கடத்திலுள்ள நீரின் அசைவே விம்பத்திற்கும் ஆவதன்றி விம்பந்தானே அசையாதது போல உடம்பின் கட்டோன்றும் விகாரங்களே உயிர்க்கும் எய்துவதல்லது உயிர் தன்னிலையிலே விகாரப்படுவதின் றனவுங் கூறுவர். இங்ஙனம் உரைப்பின், உடம்பின்கட் டோன்றும் வினை வேறுபாடுகளன்றி உயிர்க்கென ஒரு வினையின் றென்பது பட்டுத் தேகமே அறிவுடைத்தாய் யாவுஞ் செய்து போதர அதன்கண் நிலை பெறும் ஆன்மா எவ்வகைப் பட்ட உணர்வு முடைத்தன்றாமென்று கொள்ளப் படும்; உணர்வில்லாத தேகம் உணர்வுடைத் தெனவும், உணர்வுடைய வுயிர் உணர்விலதென்றும் அதனால் பெறப் படுதலின் அவர் தேகான்மவாதங் கூறும் உலகாயதராவர். ஆதலின், அவர்கூறும் அவ்வுவமை ஈண்டைக்குச் சிறிதும் பொருந்தாதாகலின், அது கொண்டு அவர் நிறுவப்புகுந்த பொருள் காண்டலளவைக்கு முற்றும் மாறுபாடா மென்றொழிக. அற்றேலஃதாக, இனித் தேகமே, ஆன்மா வெனிற்படும் இழுக்கென்னையெனின்;-- நான்' என்னுஞ் சொல்லால் உணர்த்தப்படும் பொருள் உடம்பும் அதன் உறுப்புக்களும் ஆகாமை நன்கறியப்படுத லானும் எல்லாக் கருவிகளும் ஒருங்கியைந்த உடம்பு கிடப்ப

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_28.pdf/42&oldid=1591371" இலிருந்து மீள்விக்கப்பட்டது