உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 28.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18

மறைமலையம் 28

உயிர் நீங்கிய வழி அவ்வுடம்பின்கண் அவ்வினை வேறு பாடுகள் தோன்றக் காணாமையானும் தேகமே யான்மாவாதல் யாங்ஙனமென் றொழிக. இன்னும் இது பற்றி எழுங்கடா சூத்திர வாராய்ச்சியுட்

விைை

களெல்லாம்

காட்டுதும்.

னி

முன்னர்ச்

இனி இவ்வான்மா ஈசுரனைப்போல இயற்கையறிவு டைத்தாயினுந் தன்னைப் பொதிந்த அறியாமையினால் அறிவு விளங்கப் பெறாது கிடக்கும். இதற்குப் பிரமாணம் என்னை யெனின்;--நாடோறும் ஆன்மாக்கள் அயர்ந்துறங்குங் காலத்து அறிவிலராதல் காணப்படுதலின், இதற்குங் காண்டலளவையே பிரமாணமென்க. அற்றன்று, குவிந்து விரியும் இயல்பினை யுடையதாகலின் சுழுத்தியிற் சுருங்கியும் சாக்கிரத்தில் விரிந்தும் ஆன்மவறிவு விளங்குமென ஐக்கவாத சைவர் கூறுவர். சுத்தமாய் என்றும் விளங்கப் பெறுகின்ற அறிவுடையதாயின் அது சுருங்கியும் விரிந்தும் வருவதற்குக் காரணம் வேண்டு மென்றே? இயற்கையிலே விளக்க முடையதாய்ப் பிரகாசிக் கின்ற சூரியன் என்றும் ஒரே பெற்றித்தாய்க் காய்தலும், அங்ஙனம் காயாவழி அஃதங்ஙன மாதற்குக் கரியமுகில் இடை மறைத்தலுங் காண்டு மாகலின், ஆன்மவறிவு அங்ஙனம் இருவகைப்படுதற்கு ஒரு காரணம் இன்றியமையாது வேண்டப்படும். என்னை? காரியம் உள்வழிக் காரணமுண்மை யமமாகலின் என்க. இங்ஙனம் மறைத்தற் காரணம் பிறிதொருவாற்றாற் பெறப்படாமையின் ஆன்ம வறிவினைத் தடைசெய்து அதனோடு உடன் நிற்பது ஓர் அழுக்குண்டென்க. அற்றேல் ஒரு காலத்து ஒருங்குள்ள ஈசுரன் ஆன்மா வென்னும் இருவேறு அறிவுப் பொருள்களுள் ஆன்மாவின்கண் மாத்திரம் அவ்வறியாமை மலம் உடன் நின்றவா றென்னையெனின்;-- அஃது அவ்வப் பொருளியற்கை என்க. நெற்றோன்றுங் காலத்து உமியுந்தவிடும் அதன் உடற்றோன்றுதலும், செம்பின்கட் களிம்பு முன்னே உளதாதலும் போல் ஆன்மாவின் கண் மலமும் இயற்கையே உண் டென்றுணரப்படும். அஃது இயற்கையாகத் தான் எப்படி இருக்கக் கூடுமென வினாவு வார்க்குக் கடவுள் தொன்று தொட்டே அறிவு விளங்கப் பெற்றுச் சருவ வியாபியாய் நிற்றலென்னை எனக் கூறி மறுக்க. அற்றேல்,

நியம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_28.pdf/43&oldid=1591372" இலிருந்து மீள்விக்கப்பட்டது