உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 28.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிவஞான போத ஆராய்ச்சி

21

காரணமாய் ஆன்மாவினுடனின்று மறைப்பதூஉம் மலமே யாகலின், ஆன்மா மயக்கத்தான் ஆணவத்தைப் பற்றியதென உரைக்கும் உரையே தன்னை மறுத்து அஃது அதனைப் பற்றியதில்லையென நாட்டும் என்க.

அற்றேல், பொற்றிரள் தன்னைக்கண்ட மாந்தரைத் தன்மாட்டு ஈர்த்தல் போல, ஆணவமும் ஆன்மாக்களைத் தன்மாட்டு ஈர்க்கவல்லதாமென்று உரைத்து மெனின்;-- நன்று கூறினாய், ஆணவமோ அறிவில்லாத ஒரு சடப் பொருள், ஆன்மாவோ அறிவுடைய சித்துப்பொருள்; தன் இச்சைவழி இயங்கவல்லதான ஆன்மசித்துப் பொருளை அவ்வாறு இயங்கமாட்டாத ஆணவச்சடப்பொருள் தன்மாட்டீர்க்கு மன்றல் பேதைமையாம். எடுத்துக்காட்டிய உவமையும் பொருத்தமுடைத்தன்றாம். என்னை? உலக வொழுக்கங்கள் பலவற்றினையும் முட்டின்றி நடைபெறுவித்தற்கு ஓர் இன்றியமையாச் சாதனமாய் மக்கட்கு பயன்படுவது பொன் னாம்; பொன் அவ்வாறு பயன்படுதலை ஓர்ந்து மக்கள் அதனைப்பெற விழைகின்றாரல்லது பிறிதில்லை; அப்பொன் அவ்வாறு பயன்படுதலுடைத்தன்றாயின் யாருமே அதனைப் பெறுதற்கு முந்துறார் என்பது திண்ணமாகலின். ஆகவே பொன்றானே மக்களைத் தன்மாட்டு ஈர்க்கும் வலியில தென்பதும், மக்கடாமே அதன் பயனுணர்ந்து அதனைப் பற்றுவரென்பதும் இனிது விளங்கலின், அவ்வுவமை கொண்டு ஆணவமே ஆன்மாவை ஈர்க்கும் எனக் கூறுதல் ஏலாதா மென்க. அற்றன்று,. காந்தம் இருப்பூசியைத் தன்பாலிழுத்தல்போல ஆணவமும் ஆன்மாவைத் தன் பாலிழுக்குமாம் பிறவெனின்; அதுவும் பொருந்தாது; காந்தமும் அறிவில்லாத ஒரு சடப் பொருள்; ஒரு சடப் பொருள் ஏனையொரு சடப் பொருளை இழுத்தற்கு எடுத்துக் காட்டப்படுவதாகிய இவ்வுவமையால் ஆணவமாகிய சடப் பொருள் ஆன்மாவாகிய சித்துப்பொருளை இழுக்குமென நிறுவப்புகுதல் அளவை மாறுபாடாமென்க. காந்தமாகிய சடப்பொருள் எறும்பு, புழு முதலான சித்துப் பொருள்களை இழுக்குமாயினன்றே அவ்வுவமை ஈண்டைக்குப் பொருத்தமாம், அஃது இருப்பூசியை யன்றிப் பிறவற்றை இழுக்கவல்ல தல்லாமை போல ஆணவமும் ஆன்மாவை ஈர்க்க

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_28.pdf/46&oldid=1591375" இலிருந்து மீள்விக்கப்பட்டது