உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 28.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22

மறைமலையம் 28

வல்லதன்றென்பது அவ்வுவமை கொண்டே நாட்டப்படு மென்றுணர்க. அல்லதூஉம், இருப்பூசியைத் தன்கட் பற்றிய காந்தம் பின் தானே அதனை விட மாட்டாதாய் என்றும் அதனைப் பிடித்தபிடியே கிடக்கும்; ஆணவமும் அதுபோல் ஆன்மாவைப் பற்றியதாயின் பின் அஃது என்றும் அதனைப் பற்றியவாறே கிடக்குமல்லது, தானே அதனை விட மாட்டா தாம். விடமாட்டாதாகவே ஆன்மாவுக்கு என்றும் அறிவு விளங்குதலில்லையாய்ப் போதலோடு முத்தியின்ப மும் அதன் கைவரப் பெறுதலில்லையாம். இது பிரத்தியட்ச விரோத து மாயிருத்தலானும், உயிர்கள் அறிவு விளக்கத்தினையும் வீடு பேற்றின்பத் தினையும் அவாவி முயறலே நாடோறுங் காணப்படும் நிகழ்ச்சி யாயிருத்தலானும், அறியாமை சிறிது சிறிதாகத் தேய்ந்து போதல் கற்றறிவுடைய சான்றோரிடத்து அனுபவமாய் வைத்து அறியக் கிடத்த லானும் ஆணவமலம் ஆன்மாவைப் பற்றிய தென்றல் எவ் வாற்றானும் பொருந்து வதன்றென மறுக்க. இவ்வாறு ஆணவமும் ஆன்மாவைப் பற்றாதாக, ஆன்மாவும், ஆணவத்தைப் பற்றாதாக, இறைவனும் அவ்விரண்டனையும் ஒருங்கு பொருத்தானாகவே, பாரிசேட அளவையால் ஆணவமும் ஆன்மாவும் அநாதிதொட்டே ஒன்றாயிருக்கு மென்க.

ங்ஙனம் ஆணவத்தோடு ஒன்றாய் நிற்றலிற் பசுவென நூல்களால் நுவலப்படும் ஆன்மாக்களின் உண்மை நிலை யாதோவெனிற் கூறுதும். ஆன்மா அறிவுடைய சேதனப் பொருளென்பது முன்னமே காட்டப்பட்டமை யானும், சதனப் பொருளெல்லாம் காலத்தானும் இடத்தானும் வரையறுக்கப்படாத இயல்பின வென்பது எல்லார்க்கும் ஒப்பமுடிந்தமையானும், காலத்தானும் இடத்தானும் வரை யறைப்படாதன வெல்லாம் சருவவியாபக முடையன வென்பது தருக்கநூற் றுணிபாகலானும், ஆன்மாக்க ளெல்லாம் சருவ வியாபகச் சித்துப் பொருள்களென்றே முடிக்கப்படும். ஆன்மா சருவ வியாபகமுடைய சித்துப் பொருளாயின் அது மனித சரீரம் ஒன்றெடுத்தவழி அச் சரீரத்தைவிட்டு அப்பால் அறிவு விளங் காமையும் புழுவுடம்பு பெற்றவழி அவ்வுடம்புக்கு அப்பால் அறிவு விளங்காமையும் என்னையோ வெனின்;-- ஆணவ மலம் ஆன்ம அறிவு வியாபகம் முழுவதையும் மறைத்து நிற்றலின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_28.pdf/47&oldid=1591376" இலிருந்து மீள்விக்கப்பட்டது