உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 28.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அவ்வான்மா

சிவஞான போத ஆராய்ச்சி

23

சரீரங்கடோறும் சிறிது சிறிதே அறிவு விளங்கப்பெறுகின்றதென்க. இதனால், ஆணவ மலம் ஆன்ம அறிவு முழுதினையும் மறைக்குமென்பதும், மாயையிலுற் பத்தியான மனித வுடம்பு, புழுவுடம்புபோல்வன அவ்வறி வினைச் சிறிது விளங்கச் செய்யுமென்பதும் ஈண்டே உணரற் பாலனவாம். நூனமுற்ற கண்ணைக் காணச் செய்தற்குக் கண்ணாடி அவசியமாக வேண்டப்படுதல்போல ஆணவத் தான் மறைப்புண்ட ஆன்ம அறிவை விளங்கச் செய்தற்கு மாயா காரியமான உடம்பு இன்றியமையாது வேண்டப் படுவதேயாம். அற்றேல், இவ்வுடம்பின் மாத்திரத்தால் ஆன்மவறிவு கட்டுப் பட்டு விளங்குமென்றுரை யாமோ வெனின்; உரையாம்.

அல்ல தங்ஙனம் உரைப்பின் வரும் இழுக்கென்னையெனின்;-- அறிவுப் பொருளெல்லாம் காலத்தானும் இடத்தானும் வரையறைப் படாவென்றும், சடப்பொருளே அவற்றால் வரையறைப் படுமென்றும் முன்னே காட்டப்பட்டமையால், ஈண்டு ஆன்ம அறிவு சடரூபமான உடம்பினால் வரையறுக்கப் படுமென்று கூறின், அஃது அங்ஙனம் வரையறுக்கப்படும் சடப்பொருளாய் முடித்து ஆன்மாச் சித்து என்னுஞ் சித்தாந்தத் தோடு முரணும். ஆகையால் அங்ஙனம் முரணாமைப் பொருட்டு யாண்டுஞ் சருவ வியாபியாய் இருக்கும் ஆன்ம அறிவு எவ்விடத்தே உடம்பு தன்னைப் பற்றி விளக்கலூறுகின்ற தோ அவ்விடத்தே தன்னைச் சிறிது விளங்கக் காட்டு மென்றலே தகவுடைத்தாம் என்க. பாசிமூடிய ஒருபெரும் பளிங்குக்கல்லைச் சிறியதொரு கருவி கொண்டு ஓரிடத்திற் பாசி நீக்கிய வழி. அப்பாசி நீக்கிய இட மாத்திரமே கட்புலனாய் மின்னி விளங்குதல்போல, ஆணவத்தால் மறைவுண்ட ஆன்ம வியாபகத்தில் உடம்பினாற் பற்றப்படும் இடம் மாத்திரமே ஈண்டு விளங்கப் பெறுகின்ற தென்று ணர்க. எனவே, சாத்தன் என்னும் ஓருடம்பில் தோன்று கின்ற ஆன்ம அறிவானது அவ்வுடம்பின் மாத்திரையாய் வரம்புபட்டு நில்லாமல் யாண்டும் வியாபித்துள்ள தென்பதே முடி பொருளாம். அற்றாயினும், அவ்வுடம்பிற் றோன்றிய ஆன்மஅறிவு அத் தோன்றுமளவாற் பாசம் நீங்கிய தென்பதும், அவ்வுடம்போடு தொடர்புபட்டு யாண்டும் வியாபிக்கும் அதன் அறிவின் மற்றைப்பாகம் ஆணவத்தான் முற்றும் மறைவு பட் பட்டிருக்கின்ற

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_28.pdf/48&oldid=1591377" இலிருந்து மீள்விக்கப்பட்டது