உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 28.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24

மறைமலையம் - 28

தென்பதும், இவ்வாற்றால் ஓரான்மவறிவு ஓருடம்பிற் றோன்றுதல் பற்றியே அஃது அவ்வுடம்பினுள் ஏகதேசப்பட்டு நிற்குமெனல் பொருந்தா தென்பதும் உற்றுணரற் பாலனவாம்

என்க.

T

அற்றேல், சருமவியாபகமான ஆன்ம அறிவை மறைக்கும் ஆணவமலமும் சருவவியாபக முடைத்தென்பது பெறப் படுமாலோ வெனின், அவ்வாறு பெறப்படுதல் பற்றி ஈண்டைக் காவதோர் இழுக்கொன்று மில்லையென்க. சடப்பொருள் எல்லாம் காலத்தானும் இடத்தானும் வரை யறுக்கப்படுவன வென்று முற்கூறினமையின் அவற்றிற்குச் சருவ வியாபகஞ் சொல்லுதல் கூடாமை யானும், ஆணவ முஞ் சடப்பொரு ளென்றுமுன்னே காட்டினமையின் அது சருவ வியாபகமுடைத்தென ஈண்டுக் கூறுதல் முன்னொடு பின் மலைவாமாதலானும் அஃது இழுக்கேயாமெனின்; சடப்பொருளியல்பு முற்று மறியாது கூறினாய், காலத்தானும் இடத்தானும் வரையறைப் படுஞ் சடப்பொருள் என்றது, சடப்பொருளின் காரியங்களே யாம். ஒரு மட்பாண்டத்துள் முகந்த தண்ணீர் காரியச் சடப்பொருளாகலின் அஃது அப்பாண்டத்தின் அளவாய் வரையறுக்கப் படுவதாயிற்று, மற்ற அத்தண்ணீர் முழுவதும் ஆவியாய்ப் பரிணமித்து மறைந்தவழி, அங்ஙனம் மறைந்த அத் தண்ணீரின் காரணம் முன்போல் வரையப்படாது அருவாய் வியாபகமாய்ப் போம். ஆகவே

ப்பொருள் தானும் காரியப்படாது அருவாய் நின்றதாயின் அது பிறிதொன்றான் அகப்படுத்தப் படாமல் எங்கும் வியாபியாயே நிற்குமென்பது தேற்றமாம். ஆதலால், ஆணவமாகிய சடப்பொருளும் தான் அருவாய்க் காரண நிலையில் நிற்பதொன்றாகலின் அது சருவ வியாபக முடைத்தாய் ஆன்ம அறிவு வியாபக முழுதினையும் மறைத்த படியாகவே நிற்கும் என்க. காரியப்பொருளெல்லாம் அநித்த மென்று நூல்கள் கூறுவதூஉம், அவை காலம் இட ம் என்ப வற்றால் வரையறைப்படுதல் பற்றியேயாம். காரணப் பொருள்கள் அவ்வாறு வரையறுக்கப்படாமையின் அவை என்றுமுள்ள நித்தப்பொருள்களா மென்பதூஉம், தத்தங் காரண நிலையில் ஆணவம், காமியம், மாயை என்னும் சடப்பொருள்கள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_28.pdf/49&oldid=1591378" இலிருந்து மீள்விக்கப்பட்டது