உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 28.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிவஞான போத ஆராய்ச்சி

25

மூன்றும் நித்தமேயாமென்பதூஉம் ஈண்டுக் கூறியவாற்றால் இனிது விளங்கற் பாலனவேயாம் என்க.

ஆணவ

அற்றேலஃதாக, இறைவனும் சருவவியாபகப் பொருள், ஆன்மாவும் சருவவியாபகப்பொருள், மலமும் சருவ வியாபகப் பொருள் என்று உரைத்தால் இவை மூன்றும் ஒன்றோ டொன்று மருவி நிற்குமாறுதான் யாங்ஙனமெனின்; மலமோ சடப்பொருளாயினும் சூக்குமமான நிலையுடையதாம்; ஆன்மாவோ சித்துப்பொருளாய் அதுவுஞ் சூக்குமமான நிலையில் நிற்பதாம்; கடவுளோ சுத்த சித்துப் பொருளாய் இவை இரண்டினும் மேற்பட்ட சூக்கும நிலை யுடையதாம். ஆகவே, ஆன்மாவும் ஆணவமும் பிரிப்பின்றி ஒன்றோ

ன்று கலப்புற்றவாறாய் வியாபித்து நிற்க அவ்விரண்டினும் கடவுட்பொருள்வியாபித்து நிற்கு மென்க. இங்ஙனம் இவை பிரிவற நிற்கும் வியாபகநிலை சிறிதறிவு விளங்கப்பெறுஞ் சிற்றுயிர்களான நம்மனோரால் முற்றும் அறியவாராதாயினும், மாணாக்கர்க்கு இஃது ஒருவாறாயினும் விளங்கல்வேண்டி ஆன்றோராற் காட்டப் பட்ட ஒருவமையை ஈண்டெடுத்துக் கூறுவாம். கடல் என்பது உவர்நீர் நிற்கும் ஒரு பெருவெளியாம்; இவ்வெளி முழுவதும் நிற்கும் நீர் தூய தனிநீராகவல்லாமல் உப்போடு கலந்தபடியேநிற்பது.கடல்நீர் முழுவதும் உப்பாகவே யிருத்த லால், அக்கடல் நீரும் அதிற் கலந்த உவரும் ஒன்றாய் க உடன்நிற்கின்றன. உவரான இக்கடல் நீரெங்கும் ‘கடல்’ எனப்படும் பெருவெளி வியாபித் திருக்கின்றது. இது போலவே சூக்கும சுத்தசித்தும் பெருவெளி யான சிவமும், கலப்புற்று நிற்கும் ஆன்ம ஆணவங்களில் வியாபித்து நிற்கின்றது. நீரும் உப்பும் ஒருகாலத்துக் கலந்தன வாகாமல் அநாதியாகவே ஒன்றாய் நிற்றல்போல ஆன்மாவும் ஆணவமும் அநாதிதொட்டு ஒன்றாகவே நிற்கின்றன. நீர்: ஆன்மா, உப்பு: ஆணவமலம். கடற்பெரு வெளியில் நீரும், நீரில் உப்பும் இருத்தல் போலச் சிவபெருவெளியில் ஆன் மாவும் ஆன்மாவில் மலமும் இருக்கின்றன. கடற்பெரு வெளியின் வியாபகத்திலே நீர் வியாபித்திருக்கின்றது, சிவப்பெரு வெளியின் வியாபகத்திலே ஆன்மா வியாபித்திருக்கின்றது; நீரின் வியாபகத்திலே உவர் வியாபித் திருக்கின்றது, ஆன்ம வியாபகத்திலே மலம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_28.pdf/50&oldid=1591379" இலிருந்து மீள்விக்கப்பட்டது