உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 28.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26

மறைமலையம் - 28

வியாபித்திருக் கின்றது. சிவம் என்னும் முழுமுதற் பரம்பொருள் ஏனையிரண்ட னை யிரண்டனுள்ளும் நிறைந்திருத்தலின் அதுவே வியாபகப் பொரு ளென்றும், ஆன்மா அச்சிவ வியாபகத்தினுள் வியாபித் திருத்தலின் இது வியாப்பியப் பொருள் என்றும், மலமானது ஆன்மாவோடு சமவியாபகமாய் நிற்றலின் இது வியாத்திப் பொருளென்றும் அறிவு நூல்கள் நுவலா நிற்கும். எனவே,

சி

-

மொன்றே ஏனை எல்லா வற்றினையும் ஊடுருவி வியாபிப்பதென்பதும், மற்றைய வெல்லாம் அச்சிவ வெளியின் உள்ளடங்கி வியாபகமாய் நிற்குமென்பதும் ஈண்டு உணரற் பாலனவாம். அற்றேல், சிவவெளியின் உள்ளடங்கி நின்ற ஆன்ம ஆணவங்கள் அவ்வெளியால் வரையறுக்கப்படுமாதலின், அவை அங்ஙனம் வரை யறைக்கப்படும் ஏனைக் காரியப் பொருள்கள்போல அநித்த மாய் முடியுமாலோவெனின்; அற்றன்று, ஒன்றனை வரை யறைப்படுத்துகின்ற பிறிதொரு பொருள் தானும் வரையறைப்பட்ட இலக்கணமுடையதாம். ஒரு மட்குடம் தான் வரையறைப்பட்ட காரிய காரிய உருவப் பொருளாயிருத்த லின், தன்போற் காரியப் பொருளாய்த் தன்கண் நிரப்பப் பட்ட தண்ணீரை வரையறைப்படுத்துகின்றது. அதுபோற் சிவமும் ஆன்ம ஆணவங்களை வரையறைப்படுத்து மெனின் அச்சிவமும் வரையறைக்கப்பட்ட இலக்கணமுடைத் தாய் அநித்தப்பொரு ளென்று கொள்ளப்படும். சிவம் அங்ஙனம் அநித்தக் காரியப் பொருளாதல் எவ்வாற்றானும் பெறப் படாமையின், அச்சிவ வியாபகத்தால் ஆன்ம ஆணவங்கள் வரையறைப்பட்டு நிற்குமெனல் ஒரு சிறிதும் பெறப் படுவ தில்லையென்க. அற்றன்று, சிவவியாபகம் ஏனை யிரண்டனையும் மேற்கவிந்த வியாபகமாதலின், அவ் வியாபகத்தின் உள்ள நின்ற ஆன்ம ஆணவங்கள் அவ்வாற்றால் வரையறைப் படுமாலோவெனின்;- இதுவும் பொருந்தாது. சிவ வியாபகத்திற்கு எல்லையே இல்லை யாகலின் அச்சிவவியாபக முழுவதூஉம் உள்ளடங்கி வியாபிக்கும் ஆன்ம ஆணவ வியாபகங்களுக்கும் எல்லை யில்லை யென்க. சிவவியாபகத்திற்கு

எல்

ங்கி

எல்லை

பெறப்பட்டா லல்லது அச் சிவத்தினுள் வியாபிக்கும் ஆன்ம ஆணவ வியாபகங்கட்குச் சிறிதும் எல்லை பெறப்பட மாட்டா தென்க. இங்ஙனமாதலின், இறைவன், உயிர், மலம் என்னும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_28.pdf/51&oldid=1591380" இலிருந்து மீள்விக்கப்பட்டது