உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 28.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36

  • மறைமலையம் 28

தருவனவும், நாசிப் புலனாம் கந்தத்தைத் தருவனவும் ஆகும். சத்தத்தைத் தருவது ஆகாயம், பரிசத்தைத் தருவது வாயு, ரூபத்தைத் தருவது தேயு, சுவையைத் தருவது அப்பு, கந்தத்தைத் தருவது பிருதிவி; பிருதிவி, அப்பு, தேயு, வாயு, ஆகாயம் என்னும் இவ்வைந்தின்மேல் ஐம்பொறிகளான் அறியப்படுவதொன்று மில்லை. எனவே, புறத்துத் தோன்றுகின்ற எல்லாப் பொருள் களும் மண், புனல், அனல், கால், விசும்பு என்னும் ஐம்பூதக் கலப்பிற் பிறந்தனவே யாமென்பது இனிது பெறப்படும். புறத்துப் பொருள் ஒவ்வொன்றையும் பகுத்துப் பார்த்தால் அவை யெல்லாம் இவ்வைம்பூதங்களாகப் பிரிந்து போதல் திண்ணம். தனை ஓர் உதாரணமுகத்தான் விளக்கிக் காட்டுதும் விசித்திர மான ஓர் அரசன் மாளிகையின் அமைப்பைக் கண்டவழிப் பாகுபாட்டுணர்ச்சியில்லாப் பேதை ‘ஆ! இத்துணைப் பெரிய மாளிகை எங்ஙனம் வந்தது! எங்ஙனம் அமைந்தது!' என்று எண்ணி எண்ணி வியப்புறு வானன்றே? மற்று நுண்ணறிவு டையான் அதனைக் கண்டக்கால் கல்லுஞ் சுண்ணாம்பு மரங்களும் இயைக்குமாறு அறிந்து ஒருவன் இனிது இயைத் தமையினாலன்றே இத்துணைப் பெரிய மாளிகை ஈங்கு வரலாயிற்றென்று அதன் மூலம் அறிந்து இன்புறுவான்? எத்துணைப் பெரிய கட்டிடமேயாயினும் அது கல் சுண்ணம் முதலான சிலவற்றின் றொகுப்பால் அமைந்தவாறு போல, எத்துணைப் பரிய உலகமேனும், அதன்கண்

உள்ள

பாருள்கள் எத்துணைப் பெரியவேனும் அவையெல்லாம் இவ்வைம்பூதங்களின் கூட்டுறவாற் றோன்றியனவேயா மென்பது நுணுகி யாராயவல்லார்க்கெல்லாம் இனிது விளங்கா நிற்கும். அற்றேல், ஐம்பூதங்களான சிலவற்றிலிருந்து அளவு குறித்தறியப்படாது விரிந்து பெரியவாய்க் காணப் படும் ப்பொருள்கள் பலவும் பிறந்தனவென்றால் யாங்ஙனம் பொருந்துமெனிற் கூறுதும். இவ்வைம் பூதங்களுந் தத்தங் காரணநிலையிற் கட்புலனா காமல் அளவு படாது விரிந்து கிடப்பனவாம்; அவை தம்மிற் சிற்சில பகுதிகள் காரியப் பொருள்களாய்த் திரிந்து கட்புலனாய் வருகின்றன. ஆகவே, காணப்படாதது கொண்டே ஐம் பூதங்கள் சில என்றும், காணப்பட்டது கொண்டே பொருள் கள் பலவாய்ப் பெரிய என்றுங் கொள்ளற்க. இஞ்ஞான் றுள்ள பொருள்களினும் பல

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_28.pdf/61&oldid=1591390" இலிருந்து மீள்விக்கப்பட்டது