உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 28.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிவஞான போத ஆராய்ச்சி

35

தோன்றிய எண்ணத்தி லும் அவ்வெண்ணத்தின் வழித் தோன்றிய இச்சையிலும் அவனறிவு நிலை பெற்று நின்றது அவன் உயிர் துறந்த பின்னுந் தன்சூக்கும உடம்பில் நின்று, தன் எண்ணத்திற்கும் இச்சைக்கும் ஏற்ற ஒரு பிறவியிற் புகுதவே கருதியிருப்பா னாகலின் அவன் கருத்து முற்றுப் பெறுமாறு எல்லாம் வல்ல இறைவன் அவனது இச்சைக்கேற்ற ஓர் இழிகுலத்தில் அவனைப் பிறப்பித்து விடுவன். அக்குலத்திற் பிறந்து வளரும் போதே அவன் தான் முற்பிறவியிற் றொகுத்த தீய சய்கைகளை அவிழ்த்து விரிய விடுகின்றான். இவ்வுதாரணத்தின் கண் முற்காட்டிய வினைப்பகுப்பைப் பொருத்திப் பார்க்கலுறின், அவற்றின் இயல்பெல்லாம் தெற்றென விளங்கா நிற்கும். மேலைப் பிறவியில் ஆணவ மலத்தின் சார்பினின்று பழகிய தீச்செயல்களே அவனுக்கு ஆகாமிய வினைகளாயின; அங்ஙனமீட்டிய அவ்வினைகள் அவன் அறிவிச்சை தொழில் களிலெல்லாம் ஏறிச் சூக்கும வடிவாய் நின்றனவாகலின் அவையே சஞ்சிதவினைகளாயின; அச் சஞ்சித வினைகளி னின்றும் ஒரு கூறெடுத்து நுகருதற் பொருட்டு இறைவ னருளால் அவன் ஓர் இழிகுலத்திற் பிறந்து றைவனருளால் அவ்வினைகளைத் துய்த்துவரலே பிராரப்த வினை நுகர்ச்சியாயினதென்று இங்ஙனம் ஒட்டி உணர்ந்து கொள்க.

இனி, 'மாயை' யாவது இன்னதென்று ஒரு சிறிது விளக்கு வாம். ஒரு பொருளை நிச்சயித்துணர்வது பஞ்சேந் திரியங்களின் வழித்தாகச் செல்லும் நமது அறிவினாலன்றிப் பிறிதில்லை. கண்ணாற் கண்டுஞ் செவியாற் கேட்டும் நாவாற் சுவைத்தும் மூக்கான் முகர்ந்தும் உடம்பாற் பரிசித்தும் இப்பொருள் இவ்வியல்பிற்று. இஃது இதனின்வேறு என்ன அறிவு கூடிவருகின்றோம். புறத்தே காணப்படுகின்ற பொருள் களெல்லாம் இங்ஙனம் பஞ்சேந்திரியங்களின் வாயிலாக அறிவாற் கவரப்பட்டு வருகின்றன. இப் பஞ்சேந்திரிய வுணர்ச்சிக்கு அகப்படாதது புறத்துப் பொருள்களுள் ஒன்றும் இல்லை. ஆகவே, புறம்பிலுள்ள பொருள்கள் அனைத்தும் ஐந்து கூறாய் அடங்கும். அவை செவிப்புலனாஞ் சத்தத்தைத் தருவனவும், உடம்பிற் புலனாம் பரிசத்தைத் தருவனவும் கட்புலனாம் உருவத்தைத் தருவனவும், நாப்புலனாற் சுவையைத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_28.pdf/60&oldid=1591389" இலிருந்து மீள்விக்கப்பட்டது