உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 28.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34

மறைமலையம் - 28

அவரறிவைப் பற்றிய ஆணவவலி சிறிது சுருங்குகின்ற தென்றோர்க. அவர்தம் அறிவை அங்ஙன மெல்லாம் பண் படுத்த முயன்றது போலவே, தம் கிரியை இச்சைகளையும் பண்படுத்தி வருவாராயின் அவர்க்கும் அவற்றான்வரும் பாவச் செய்கைகள் அகன்று ஒழியும் அவ்வாறின்றி அவர் அறிவை மாத்திரம் பண்படுத்தி ஏனை இச்சை கிரியைகளை வாளா கிடக்க விட்டமையின் அவை யிரண்டும் ஆணவ வலியில் முற்றும் வசப்பட்டு அவர் தம்மைப் பாவவழிகளிற் றூண்டி நிற்கின்றன. பாவவழியினின்றும் அகலுதற்கு இன்றியமையாச் சாதனமாவது ஆன்மாக்கள் தம்மிச்சா ஞானக் கிரியை மூன்றனையும் பண்படுத்திப் பழக்குத லேயாம். ஒன்றைவிட்டுப் பிறிதொன்றைப் பழக்குதலாற் போதரும் பயன்பெரிதாகா தென்க. ஆகவே அறிவுடையார் L பாவஞ் செய்தற்கும் அவர்க்குள்ள ஆணவமலமே காரண மாவதன்றிக் கன்மமலமன் றென்பது இது கொண்டு நுனித் தறியற்பாற்று.

L

அவ்வாறாயின் இனிக் கன்மமலத்திற்கே உரிய விசேட இலக்கணந்தா னென்னையெனின்;--ஆணவமலச் சார்பான் ஆ ன்மாக்கள் செய்யும் வினைகளின் றொகுப்பே கன்ம மலமென்னும் பெயர்க்குரித்தாவதாம். ஒருதரம் செய் தீட்டிய வினைகள் அவற்றை ஈட்டிய உயிர்கட்குத் தம் பயனை நுகர்விக்கும். இங்ஙனம் ஒருயிர் தனக்குரிய ஆணவகுண முனைப்பாற் றானாகவே ஈட்டும் இவ்வினைத் தொகுதி யையே ஆகாமியம் என்றும், இவ்வினைத் தொகுதி அவ்வுயிரின் பிற்பிறவிக்கு ஏதுவாய் அவ்வுயிரின்கட் சூக்கும வடிவாய்க் கட்டுப்பட்டு நிற்றலையே சஞ்சிதம் என்றும், அக் கட்டுப்பட்டு நின்ற வினைத் தொகுதியிற் பிற்பிறவியிற் பயன்பட்டு நுகரப் பட்டு வருங்கூறே பிராரப்தம் என்றுஞ் சித்தாந்தநூல்கள் இனிது கூறுகின்றன. இவற்றின் இயல்பை இன்னுஞ் சிறிது விளங்க உரைப்பாம். இப் பிறவியின்கண் ஒருவன் மிக்கதோர் ப் அறியாமை யுடையவனாய் வஞ்சம், கோபம், பொறாமை முதலான ஆணவகுணங்களின் வழி நின்று மிகவுந் தீய செயல்களையே தம் ஆயுள் காறும் புரிந்து வந்தான்; இவ்விழி குணங்களிலேயே மிகவும் பழகின மையால் இவன்தன் ஆயுள் எல்லை கழிந்து இறக்குங் காலத்து, இக்குணங்களின் பயனாய்த்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_28.pdf/59&oldid=1591388" இலிருந்து மீள்விக்கப்பட்டது