உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 28.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நடை

சிவஞான போத ஆராய்ச்சி

33

ஆன்மாவின் தற்கிழமைப் பொருளான கன்மத்தையும் ஈண்டு ஏனையவற்றோடு உடன் வைத்து எண்ணுதல் பற்றி அஃது ஒரு தனிப் பொருளாதல் சாலாதென்க. அங்ஙனமாயினும் உயிரின்வினை நிகழ்ச்சிகள் ஆணவமலத்தின் வழிப்பட்டு பெறுங்காறும் அம் மலத்தின் றன்மையெய்தி உயிர் களைப் பந்தமுறுத்துமியல்பு பற்றி, அவையும் மலமென வைத்து ஒன்றா யெண்ணப் பட்டன. அவ்வாறாயின், கன்ம மலம் நித்தியமோ அநித்திய மோவெனின்;- ஆணவமலம் உளதாங்காறும் அவ்வாணவத் தின் வழி நிகழும் கன்மமுளதாகு மாதலானும், ஆணவமலம் என்றுமுள்ள நித்தியப் பொரு ளென்பது சைவசித்தாந்த நூல்கட்கெல்லாம் ஒப்ப முடிந்த மையின் அதன் வழிப்பட்ட கன்மமும் அவ்வாறே ஆக வேண்டு மாதலானும் கன்ம மலமும் நித்தியப் பொருளென்பதே ஈண்டுந் தேறப்பட்ட முடிபொருளாம்.

இனிக் கன்மமலமும், ஆணவமலத்தின் சார்பாற் றோன்றிய உயிரின் வினையேயாமென்பதற்கு, ஒருவன் பாவ

மான காரியம் செய்தவழி அவன் தனை யான் என்

அறியாமையாற் செய்தேன்' என்று சொல்லுதலே சான்றாம். அறியாமை தேயத் தேய அறிவுமிக்கெழுந்து விளங்கு மாகலின் பாவவினைகளும் முறைமுறையே குறையும். அற்றன்று, அறிவுடையாரும் பாவ வினைகள் புரியக் காண்டுமாகலின் அறியாமையே கன்ம மலத்திற் கேதுவா மென்றல் பொருந்தா தாம் பிறவெனின், நன்று சொன்னாய், ஆணவம் ஆன்மாவின் இச்சாஞானக் கிரியை களுள், ஞானத்தை மாத்திரம் சிறிது பற்றுதல் விட்டு அகன்று நிற்குமாயினும்ஏனை ன இச்சை கிரியைகளை அத்துணை யிலேசில் விட்டு அகன்று நிற்பதில்லை; அதனால் அறிவுடை யோரா யினும் தம் இச்சை ஆணவவயப்பட்டு நிற்றலால் ஓரோ வொருகால் அவரும் பாவமானவற்றைச் செய் கின்றார். நன்று சொன்னீர், ஆணவம், ஆன்ம ஞானத்தைச் சிறிது விட்ட கன்றதும், ஏனைக் கிரியை ச்சைகளை விட்டகலாததும் என்னையெனின்;--அதற்கு இடைவிடாத பழக்கமே ம காரண மென்க. அறிவுபெற வேண்டுவார் அது தமக்கு வாய்க்குந் தனையும் ஓய்வின்றிப் பல நூனுண் பொருளாராய்தலும், தக்கார்வாய்ப் பல்வகை அறிவுப் பொருள் கேட்டலுஞ் செய்து பழகி வருகின்றாராகலின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_28.pdf/58&oldid=1591387" இலிருந்து மீள்விக்கப்பட்டது