உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 28.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32

மறைமலையம் - 28

எல்லா அநத்தங் கட்கும் மூலகாரணமான ஆணவ மலத்தைப் போக்குதற் பொருட்டு மாயாதேகம் உயிர்கட்கு வாய்த்ததுணை யானே கன்மந் தோன்றுமென்றலே தேற்ற மாம். அற்றேல், உயிர்கட்கு உடம்பு வந்தபின் வினை தோன்றுமோ, வரும் போதே தோன்றுமோ எனக் கடாயி னார்க்கு கண்ணினொளி ஞாயிற்றி னொளி வரும் முன்னுந் தோன்றாது, வந்த பின்னுந் தோன்றாது.ஞாயிற்றினொளி வரும் போதே கண்ணொளியும் இனிது விளங்கித் தோன்றும்; அதுபோல உயிர்கட்கு உடம்பு வரும் போதே வினையும் உடன்றோன்று மென்க.

இனி இவ்வாறன்றி ஆணவம், மாயை போலக் கன்ம மலமும் ஒரு தனி முதலாய் அநாதியாயுள்ளதென் றுரைப்பின் வரும் இழுக்கென்னையெனின்;--கூறுவதும் ஆன்மாவின் அறிவிச்சை தொழில்களை உடன்மறைத்து நின்றதொன்று, அம்மறைப்பினை நீக்கி அதனறிவை விளங்கச் செய்த தொன்று; அவ்வாறு அவற்றை மறைத்தது ஆணவமலம், அம்மறைப்பினை நீக்குதற்குபகாரப்பட்டு நின்றது மாயாமலம்; ஆடையிலேறிய அழுக்கொன்று, அவ்வழுக்கினைக் கழுவிய உவர்மண் ஒன்று. அழுக்கேறிய ஆடையில் உவர் மண்ணைச் சேர்ப்பித்துக் கழிக்கும் வழி ஆடையிற் காணப்பட்ட தொழில்போல, ஆணவம் ஏறிய உயிரில் மாயையைச் சேர்ப்பித்து அவ்வாணவத் தைக் கழிப்பிக்கும் முயற்சியில் உயிரின் மாட்டுக் காணப்படுவது செயற்கையாம். இங்ஙனம் ஆணவம், மாயையென்னும் இவ்விரண்டின் கூட்டுறவாலன்றிக் கன்மமெனத் தனித்தொரு பொருளிருப்பக் காணாமையானும், அதற்குப் பிரமாணமும் இல்லாமையானும், ஆன்மவினையின் வேறாய்க் கன்ம மலமென ஒன்றுண்டென்பது பொருளில் மொழியா மென்க.

அற்றாயின், “ஏகனனேக னிருள் கரும மாயை யிரண்ட விவையாறாதியில்" என்றோதிய திருவாக்கின் கட் கன்மமும் ஒன்றாகவைத் தோதப்பட்டமையின் அஃது ஒரு தனிப்பொருள் என்று கோடலே மரபாமெனின்; அறியாது கூறினாய், ஆன்மாக் களுக்கு முன்னை வினைத் தொடர்பு தெரிய வொட்டாதபடி மறைத்து நின்று அனுக்கிரகிக்கும் ‘திரோதாயி' என்னும் அருட்சத்தியை மலங்களுடன் வைத்து மலம் என உபசரித் தோதினும் அதுபற்றி அது மலமாவான் செல்லாமை போல,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_28.pdf/57&oldid=1591386" இலிருந்து மீள்விக்கப்பட்டது