உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 28.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38

மறைமலையம் - 28

ச்

கந்தம் என்னும் ஐந்து தன்மாத்திரை களாகப் பண்டைச் சித்தாந்த நூல்கள் உரையா நிற்கும்,

D

இனித் தன் மாத்திரைகள் எனக் கூறிய இச் சூக்கும ச் பூதாகாயங்கள் ஐந்தும், தம்மிற்றோன்றிய தூலகாரியப் பூதாகாயங்களை நோக்கச் சூக்குமம் என்று ஓதப்படினும், தம்மினும் மேலாக விளங்கும் சூக்குமப் பொருள்களை நோக்க இவை தாமும் தூலங்களாகவே கொள்ளப்படு மென்றுணர்க. ஃதென்போல வெனின், உறைந்து கற்பாறை போன்றிருக்கும் பனிக்கட்டியை நோக்க அதனினின்று உருகியோடுந் தண்ணீர் சூக்குமம் என்றும் அத் தண்ணீரை நோக்க அதனின்று எழும் நீராவி சூக்குமம் என்றும் இவ்வாறு ஒன்றின் மேல் ஒன்று படிப்படியாய் சூக்குமநிலையிற் கரைந்து போதல் போலவென்க. முதலில் நிலன், நீர், தீ, வளி, வெளி என்னும் பொருள்கள் ஐந்தும் தூலமாய் நிற்கப் பின்னர் அவை கரைந்து அருவாய் ஆகாய வடிவில் நின்ற போது சூக்குமமான தன் மாத்திரைகள் என்று சொல்லப்பட்டன. அதன் பின்னர் அவை பின்னுஞ் சூக்கும மாய்க் கரைந்து தம் அகத்துள்ள ஐவகை வேறுபாடுகளையுங் காட்டாது ஒடுக்கிப் பொதுத் தன்மைப் பட்டு நின்றவழி அவை ஒரு பெயராற் பூதாதி ஆங்காரம் என்று உரைக்கப்படுவவாயின. இப் பூதாதியாங் காரம் என்பது மேற்கூறிய தன் மாத்திரைகள் ஐந்தினும் நுண்மையான சூக்கும நிலையினதாகும். தூல நிலையிற் காணப்படும் இப்புறப் பிரபஞ்சப் பொருள்களான ஐந்தும் இவ்வாறு தத்தஞ் சூக்குமமான பூதாதியாங்காரத்தின் கண் ஒடுங்கி நிற்குமென்று ஓர்ந்து கொள்க.

இனிப் இப்புறப்பிரபஞ்சத்தின்கட் சிலகாலம் நிலை பெற்று நின்று இன்ப துன்பங்களை நுகர்ந்துவரும் எண்ணிறந்த உயிர்களின் எண்ணிறந்த உடம்புகளும் அகப் பிரபஞ்சம் என்று வழங்கப்படும். புறப் பிரபஞ்சத்தின் கண் அமைந்த எவ்வகைப் பொருளையும் உயிர்கள் அறியும் வண்ணம், இவ்வுயிர்களுடன் ஒன்றாய் ஒட்டித் தோன்றும் உடம்பினிடத்தே அப் பொருள் களைப் பற்றுதற்கு இயைந்த கருவிகள் அமைக்கப் பட்டிருக்கின்றன என்றாலும், இக் கருவிகள் சிலவுடம்புகளிற் குறைந்தும் வேறு சிலவற்றில் ஏறியும் பலதிறப்பட்டுக் காணப்படுகின்றன. ஏற்றக் குறைச்ச லாய் நிகழுங் கருவிகளின்

க்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_28.pdf/63&oldid=1591392" இலிருந்து மீள்விக்கப்பட்டது