உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 28.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிவஞான போத ஆராய்ச்சி

39

அமைப்பைச் சிறிது உற்று நோக்கு வார்க்கும், உடம்புகளில் உலாவும் உயிர்களின் அறிவு ஆற்றற்கு ஏற்ப அக்கருவிகள் ஏறியுங் குறைந்துந் தோன்றுவ வாயின என்னும் உண்மை இனிது புலப்படா நிற்கும். புல் மரம் முதலியன தொட்டால் அறியும் பரிச வுணர்ச்சி மாத்திரமே உடையன; இப்புல் மரம் முதலிய வுடம்பில் நின்ற உயிர்கள் ஊற்றுணர்வுக்கு மேற்பட்டதனை அறியும் ஆற்றல் இல்லாதன வாகலின், அவற்றின் உணர்ச்சி வலிக்கேற்ப ஓரறிவு மாத்திரையே புலனாதற்குரிய புல் மரம் போன்ற உடம்புகள் அவற்றிற்கு வாய்த்தன; இவ்வுடம்புகளிற் சத்தத்தினையும், உருவத் தினையும், இரசத்தினையும், கந்தத் தினையும் கவருதற் குரிய கருவிகள் இலவாயின. இனி நத்தையுங் கிளிஞ்சிலும் போல்வன பரிசத்தினையும் இரசத் தினையும் மாத்திரமே கவரவல்லன; ஏனைச்சத்தம், உருவம், கந்தங்களை உணரவல்லன அல்ல. இனிக்கரை யானும் எறும்பும் போல்வன பரிசமும், இரசமும், கந்தமும் என்னும் மூன்றும் தெரிதல் வல்லன; ஏனைச் சத்தமும் உருவமும் அறிய மாட்டாதன. னி நண்டுந் தும்பியும் முதலாயின பரிசம், இரசம், கந்தம், உருவம் என்னும் நான்கும் அறிய வல்லன; ஏனைச் சத்தம் ஒன்று மாத்திரம் உணரமாட்டாதன. இனி னி விலங்கினங்களும் மானிடத்தில் ஒருசார் பிறப்பும் சத்தம், பரிசம், உருவம், இரசம், கந்தம் என்னும் ஐந்தும் உணரவல்லன; ஏனை மன அறிவு ஒன்று மாத்திரம் வாயாதன. இனி 'மக்கள்' என்று உயர்த்துக் கூறப்படுவோர் சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்னும் ஐந்துணர்வுகளோடு, இவ்வுணர்வுகளைப் பகுத்தும் ஒற்றுமை கொளுத்தியும் காண்கின்ற மனவுணர்வும் ஒருங்குடையராவர். ஆகவே, இம்மக்கட் பிறப்பின்கண் இவ்வுலகத்துப் பொருள் களையெல்லாம் உற்றறிதற்கு இன்றியமையாக் கருவிகள் எல்லாம் வாய்த்தாற் போல, ஏனைத் தாழ்ந்த பிறவிகளில் அங்ஙனம் அவை வாய்த்திலவென்க. இங்ஙனம் இம் மக்களுடம்பின் மாத்திரமே மாயையினின்றுந் தோன்றிய கருவிகள் முற்றும் அமைந்திருத்தலால், இக்கருவிகளின் உற்பத்தி வரிசையின் வழிச்சென்று மாயையினியல்பை உணர்ந்து கோடல் சாலவும் பொருத்தமாவ தொரு முறையாம்.

அது கி கிட டக்க, புறப்பொருள்கள் அத்துணையும் கவரற் கியைந்த கருவிகள் மக்களுடம்பில் அமைந்திருக்கின்றன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_28.pdf/64&oldid=1591393" இலிருந்து மீள்விக்கப்பட்டது