உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 28.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40

மறைமலையம் 28

னி

வென்றல் வெறுஞ் சொன் மாத்திரையாகவே யிருத்தலின், அதனைப் பொருள் பெற விளக்கிக் காட்டுகவெனின்; அவ்வாறே காட்டுதும் உலகமுழுதும் புகழோங்கப் பெற்றவரும், அமெரிக்கா தேசத்தில் மனோதத்துவ சாத்திர பண்டிதராய் அமர்ந்திருப்பவருமான உவில்லியம் ஜேம்ஸ் என்னும் பெரும் புலவர் தாம் அரிய நுண்பொருள் பொதுள எழுதிய 'மனோதத்துவ மூலப் பொருள்கள்' என்ற புத்தகத்தின் முதற்பாகத்தில் மூளையின் வினைநிலை என்னும் இரண்டாம் அத்தியாயத்திலே இவ்வரிய பெரிய விடயத்தினை இனி தெடுத்து விளக்கிக் காட்டினார். அவர் காட்டிய அந்நுண் பொருளாராய்ச்சி முழுதும் ஈண் டெடுத்துக் காட்டலுறின், இவ்வாராய்ச்சியுரை வரம்பின்றி விரியுமாகையால், அவர் முடித்துக் கூறிய பொருள் முடிவுகளிற் சிலவற்றை மாத்திரம் ஈண்டெடுத்துக் காட்டு வாம். தவளை, புறா, குரங்கு, நாய் முதலிய பிராணிகளின் தலையின் உள்ளமைந்த கருவிகளைப் பரிசோதித்துப் பார்த்ததிலிருந்து, மூளையென்னும் அவயவமே உடம்பினை வேண்டியபடியெல்லாம் நடைபெறச் செய்வ தற்கும், உலகத்துப் பொருள்களையெல்லாம் பற்றியுணர்வ தற்கும் வேண்டப்பட்ட எல்லாக் கருவிகளையும் தன்னிடத்தே அதிசூக்குமமாய் அடக்கி வைத்திருக்கின்றதென்றும் அரிய பெரிய உண்மைபுலப்படுவதாயிற்று. தலையைக் கவிந்து கொண்டு அரண்போல் அமைந்திருக்கும் மண்டையோட் டினை மிகவுஞ் சாதுரியமாகக் கழற்றி அப்புறம் வைத்தபின், தலையின் மேலும் முற்பிற் பக்கங்களிலும் பனை நுங்கு போலும் இயல்பினதாகிய மூளை ள என்னும் விழுமிய அவயவம் காணப்படும். இதுவே, பிராணிகளின் உடம்புக்கு உயிர் நிலையமாய் விளங்குவது. பருத்துயர்ந்து தோன்றும் ஓர் ஆலமரத்திற்கு நிலத்துட் புதைந்திருக்கும் அதன் வேர் உயிர் நிலையாய் நிற்பது போல், உயிர் வாழ் உடம்பிற்கு மூளையே அடிப்படையாயிருக்கின்றது. இம்மூளையின்கண் ஊறிக் கொண்டிருக்கும் அமிழ்தமானது உடம்பெங்கும் பாய்ந்து அதனை வளர்த்து வருகின்றது. இத்துணைச் சிறந்த மூளை யானது உயிர்வாழ் உடம்பினைப் பலவாற்றான் உயிர்ப்பேற்றி நிலைபெறுத்தி வரும் உண்மையைத் தெரிதற் பொருட்டு, அம்மூளையின் முற்பாதி பிற்பாதிப் பக்கங் களிலுள்ள கடுகளவு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_28.pdf/65&oldid=1591394" இலிருந்து மீள்விக்கப்பட்டது