உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 28.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிவஞான போத ஆராய்ச்சி

41

கடுகளவு ஊனை அறுத்தறுத்து அப்புறப்படுத்தி நோக்கியவழி, உடம்பின்கண் உள்ள ஒவ்வோர் உறுப்புகளும் இயக்கமின்றி நின்று விட்டமை நன்கு தெளியப்படுவதாயிற்று. அம்மூளையின் ஒரு பக்கத்திற் சிறிது ஊனை அறுத்து அகற்றிய போது கண் செவ்வையாக இருந்தும் அது பார்வை இலதாயிற்று. மற்றோர் இடத்தில் ஊனைச் சிதைத்தபின் கட்பார்வையிருந்தும் அது வலப் பக்கத்திலுள்ள பொருள்களைக் காண வலியற்ற தாயிற்று. ஒரு புறாவின் மூளையிற் சிறியதொரு பகுதியைப் பிரித்து எடுத்த பின்னர் அது வாய் முதலிய உறுப்புக்களோடு கூடி உணர்வு குறையாதிருந்தும் இரைமாத்திரம் எடாமல் இருந்தது. ஒரு குரங்கின் மூளையிற் சிறிதூனை அகற்றிப் பார்த்த போது அதற்குக் கட்பார்வை நன்றாயிருந்தும் அத்திப் பழங்களுக்கும் நெட்டித் துண்டுகளுக்கும் வேற்றுமை காண மாட்டாதாயிற்று. இவ்வாறே மூளை களின் பகுதிகளைச் சிறிதுசிறிதாக வேறு படுத்தியக்கால் ஓசையை அறிய மாட்டா தனவும், பரிசத்தை அறிய மாட்டாதனவும், சுவை காண மாட்டாதனவும், வெவ்வேறு நிறங்களைப் பகுத்துக் காண மாட்டாதனவும், கந்தவுணர்வினை இழந்தனவும், வலப்புறம் மரத்துக்கிடந்தனவும், இடப்புறம் மரத்துக் கிடந்தனவும், நினைவிழந்தனவும் ஆகப் பிராணிகள் பற்பலவாற்றால் தத்தம் அறிவுஞ் செயலும் மழுங்கப் பெற்றன. எனவே, புறத்துப் பொருள்களைப் பற்றுதற் கியைந்த கருவிகள் அத்துணையும் உயிர் வருக்கங்களின் மூளையில் அதிசூக்குமமாக அமைக்கப் பட்டிருக்கின்றன என்னும் உண்மை

பட்டது காண்க.

வை தம்மால் ஐயந்திரி பின்றி நாட்டப்

இனிப் பிராணிகளுக்கேயன்றி மக்களுடம்பினுள்ளும் இப்பெற்றித்தான அமைதியே பின்னும் நுட்பமாய் இயைந் துள்ளது என்பதற்கு, வைத்திய சாலைகளிற் கட்பார்வை குன்றியும் செவிடுபட்டும் கைகால் இயக்கங் குறைந்தும் வயிறு மந்தப்பட்டும் சுவை உணர்வு இழந்தும் மற்றும் பலதிறப்பட்ட நோய்களாற் பிணிக்கப்பட்டும் போந்த பல வேறு நோயாளி களின் மூளைகளைத் திறந்து பரிசோதனை நிகழ்த்திய அங்க சேதன வைத்தியர்கள் கூறும் உரையே தக்க சான்றாம். ஆகவே, அண்டசரீரத்தோடு பொருந்தியுணர்தற் காம் கருவிகள் முற்றும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_28.pdf/66&oldid=1591395" இலிருந்து மீள்விக்கப்பட்டது