உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 28.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42

மறைமலையம் - 28

மனிதனோடினப்பட்ட உயிர்களின் பிண்டசரீரத்தின்கண் யைக்கப்பட்டுளவென்பது சிறிதும் ஐயுறற் பாலதன்றான மெய்ப் பொருளேயா மென்க.

.

அண்டசரீரப் பகுப்புகளத்தனையும் பூதாதி யாங்காரத் தின்கண் ஒடங்கிச் சூக்குமமாய் நிற்குமாற்றை மேலே இனிது விளக்கிப் போந்தாம். அவ்வாறே இப்பிண்ட சரீரப் பகுப்பு களும் மேற்பட்ட தத்துவங்களிற் சூக்குமமாய் ஒடுங்கு மாற்றைத் தெரித்தற் பொருட்டுக் கருவிகளெல்லாம் முற்றும் இயைந்த மனிதவுடம்பின் வழித்தாக அதனை ஆராய்ந்து செல்வாம். மனிதவுடம்பிற் கட்புலனுக்கு எதிரே காணப் படும் அவயவங்கள் அறிவை நிகழ்த்துவனவும், தொழிலை நிகழ்த்துவனவும் என இரு கூறாய் நிற்கின்றன. அறிவை மாத்திரம் நிகழ்த்தும் அவயவங்கள் மெய், வாய், கண், மூக்குச், செவி என்பனவாம்; இவற்றுள் மெய்யானது புறப்பொருளின் பரிசத்தை அறிவது, வாயானது புறப் பொரு ாருளின் சுவையினை அறிவது, கண்ணானது புறப் பொருள் களின் உருவத்தை அறிவது, மூக்கானது புறப்பொருள்களின் நாற்றத்தை அறிவது, செவியானது புறப்பொருள்களின் ஓசையை அறிவது. இனித் தொழிலை மாத்திரம் நிகழ்த்தும் அவயவங்கள் வாக்கு, பாதம், பாணி, பாயுரு, உபத்தம் என்பனவாம்; இவற்றுள் வாக்குப் பேசுதலைச் செய்வது, பாதம் இயங்குதலைச் செய்வது, பாணி இடுதல் ஏற்றல்களைச் செய்வது, பாயுரு மலங்கழித்தலைச் செய்வது, உபத்தம் விந்து கழியுமுகத்தால் இன்பத்தினைச் செய்வது. மக்கள் தமது ஊனுடம்பின் புறத்தே அமைந்த கருவிகள் ஞானேந்திரியம் எனப்படும் இவ்வறிவுப்பொறிகள் ஐந்தும், கன்மேந்திரியம் எனப்படும் தொழிற்பொறிகள் ஐந்து மன்றிப் பிறிதியாது மில்லாமை எல்லார்க்கும் இனிது விளங்கக் கிடந்த தேயாம். இங்ஙனம் பகுத்துரைக்கப்பட்ட இவ்விந்திரியங் கள் பத்தும் தந்தந் தூல உருக்குலைந்து சூக்குமமாய்த் திரிபெய்து மிடத்து ஞானேந்திரியம் ஐந்தும் ‘தைசதாங்காரம்' எனப்படும் மிக நுண்ணிய தத்துவத்தினும், கன்மேந்திரியம் ஐந்தும் 'வைகிரி யாங்காரம்' எனப்படும் மிக நுண்ணிய தத்துவத்தின், கண்ணும் ஒடுங்கி ஆண்டுத் தத்தஞ் சிறப்பியல்பு களைக் காட்டாது பொதுத் தன்மைப்பட்டு நிற்கு மென்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_28.pdf/67&oldid=1591396" இலிருந்து மீள்விக்கப்பட்டது