உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 28.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிவஞான போத ஆராய்ச்சி

43

இனி உட ம்பின்கட் புறக்கருவிகளான இவை பத்தும் வ உலகத்துப் பொருள்களைப் பற்றி நிற்கும் படி, உயிரின் இச்சைவழி நின்று இவை தம்மை ஏவி உடம்பகத்தே நின்று யங்கும் உட்கருவியே ‘மனம்' எனப்படுவதாம். அகத்தே யங்கும் இம்மனத்தின் உதவியின்றிப் புறக்கருவிகளான இவை பத்தும் இயங்க மாட்டா. சிவஞானபோதம் என்னுஞ் செம்பொருணூல் நுட்பங்களில் மனம் அழுந்தி நின்று அவற்றைச் சிந்தித்துக் கொண்டிருக்குங்கால், கண் புறத்தே ஒன்றனையுங் காணாது, செவி ஒன்றனையுங் கேளாது, னையிந்திரியங்களும் இவ்வாறே ஒருவகையியக்கமும் இன்றிக் கிடக்கும். அங்ஙனம் அகத்தே ஒன்றிற் பதிந்து நில்லாது மனம் கண்ணோடு சேர்ந்து நிற்குமாயின் கண் ஒன்றனைக் காணும், சவியோடு சேர்ந்து நிற்குமாயின் செவி ஒன்றனைக் கேட்கும், இவ்வாறே ஏனையிந்திரியங்க ளோடும் அது சேர்ந்து நிற்குமாயின் அவையுந் தத்தமக்குரிய தொழில்களிலே முனைந்து நிற்கும். ஆகவே புறக்கரணங்கள் இயங்குதற்கு அகத்துள்ள மனம் என்னுங் கருவியினுதவி இன்றியமையாது வேண்டப்படுவதேயாம். இம்மனம் என்னும் அகக்கருவி புறப்பொருட் குணங்களைப் பற்றுவதும், பற்றிய வற்றைச் சிந்தித்தலுஞ் செய்வதாம். சிந்தித்தலாகிய இம் மனத்தின் செய்கையே ‘சித்தம்' என்று ஓதப்படுவதல்லது, சித்தம் என்பது தனித்தொரு கருவியாகாமையின், இது மனம் என்னுங் கருவியின் கூறதாயே அடங்கும். இப்பெற்றித்தான மனம் என்னுங் கருவி, புறத்தே காணப்படும் இந்திரியங்கள் போற் கண் முதலான புலன்களாற் கவரப்படும் பருப் பொருளா காமல், உடம்பின் அகத்தே இயங்கும் அனுபவ நுண் பொருளா யிருத்தலின், அஃது இந்திரியங்கள் பத்தினும் நுண்ணியதாதல் நன்கு பெறப்படும். இவ்வாறு இந்திரியங்களினுஞ் சூக்கும வடிவினதாய் நிற்கும் இம்மனமானது, உயிர்கடே ஈறும் வவ்வேறாய்ச் சடப் பொருளுமாய் இருத்தலின் இதுவும் அழிந்து போங்காரியப் பொருள் ஆதல் தேற்றமேயாமென்க மனம் உயிர்கடோறும் வேறுவேறாய் நிற்றல் அறியப்பட்ட தொன்றாயினும், நிலனும் புனலும் போல் அது சடப் பொருளாவது தெளியப் படாமையின் அதனைச் சடமென்றும்

அதனால் அது காரியம் என்றுங் கூறுதல் யாங்ஙனம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_28.pdf/68&oldid=1591397" இலிருந்து மீள்விக்கப்பட்டது