உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 28.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44

  • மறைமலையம் - 28

பொருந்தும்? எனிற், கூறுவாம். ஐவகையறிவும் நிகழ்தற்கு டமான மெய் மய் வாய் கண் மூக்குச் செவி என்னும் ஞானேந்திரியங்கள் ஐந்தும் ஒருங்கு பொருத்தப் பெற்றிருக்கும் அவயவம் உடம்புந் தலையுமாகும் என்பதும் இவ்வைம்பொறி யுணர்வுகளுந் தோன்றும் பிறப்பிடமாய்த் தலையினுள்ளே மேலதாய் அமர்ந்திருக்கும் முதலுறுப்பு மூளையே யாகு மென்பதும், ஏனைக் கன்மேந்திரியங்களான கை, வாய், கால், குறி, குதம் முதலியனவும் இம் மூளையின் வயப்பட்டே இயங்கு கின்றன என்பதும், இம்மூளை இல்லையாயின் இவ்விந்திரியங் களுள் ஒன்றும் ஒரு சிறிதும் இயங்காதென்பதும் மேலே விளக்கிப் போந்தாம். அது கொண்டு புறத்தே காணப்பட்ட இந்திரிய இயக்கத்திற்கு அகத்தே ஓர் இன்றியமையாக் கருவியாக அமைக்கப்பட்டிருக்கும் மூளையென்னும் உறுப்பின் சூக்கும சாரமே பண்டைக் காலத்து நூல்களில் மனம் என்னும் பெயரால் வழங்கப்பட்டதென்று உணர்க. நன்று சொன்னீர், தாமே அறிவு கூடி இயங்கா ஐம்பொறிகளுக்கும் ஐவகை யுணர்வினையும் ஊட்டி இயக்கும் மனத்தை அறிவுப் பொரு ளென்று உரையாமல் அறிவில்லாச் சடப் பொருளென்று உரைத்ததன் மேலும், பெற்றூன் பிண்டமான மூளையின் சாரமே அதுவாமெனக் கூறுதல் பொருத்தம் இல்லையாலோ வெனின்; அறியாது கூறினாய், இவ்வூனுடம்பின் அகத்தே இயங்கும் உயிர் ஒன்று மாத்திரமே அறிவுடைப் பொருளாகும்; இதனறிவு இயங்குதற்கு ஏற்றவகையா னெல்லாம் இவ்வுடம்பின் புறத்தும் அகத்தும்அமைத்து வைக்கப்பட்டிருக்கும் அமைவுகள் எல்லாம் பெரியதோர் இறும்பூது பயக்கற்பாலனவேயாயினும், அவையெல்லாம் அறிவில்லாச் சடப்பொருள்களே யாகுமென் பதனை, இறந்த மனிதனுடம்பை முழுதும் அறுத்துப் பரி சோதனை நிகழ்த்தும் அங்கசேதன பண்டிதர்கள் அளந் துரைக்கு மாறு பற்றி உணர்ந்து கோடல் வேண்டும். இங்ஙனம் பிரத்தியக்கமாகச் செய்துகாட்டப்படுந் தேகபரிசோதனையால் உடம்பின் அகப்புறவுறுப்புக்கள் அத்துணையும் அறிவில்லாச் சடப் பொருள்களாதல் ஐயமின்றித் தெளியப்படுதலின் அவற்றின் சாரமுஞ் சடமேயாகப் பெறப்படும் இப் பிரத்தியக்க முறையோடு திறம்பி மனத்தை அறிவுப் பொரு ளெனக் கூறுதல் பெரிதும் வழுவாய் முடியும்; அல்லதூஉம், மனம் அறிவுப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_28.pdf/69&oldid=1591398" இலிருந்து மீள்விக்கப்பட்டது