உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 28.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46

  • மறைமலையம் 28

மாத்திரம் நேரே உயிரோடு இயை தற்கு உரிய சூக்குமக் கருவி போல் வைத்து மாணாக்கர்க்கு இனிது விளங்கும் வண்ணம் உரை விளக்கிச் செல்வாம். உயிரறிவு மிகச் சூக்குமமாவது, மனம் அதனோடு சிறிது ஒத்த சூக்குமதூலம், மூனை மனத்தின் றன்மையோ டொத்த தூலம், கண் முதலிய இந்திரியங்கள் அம்மூளையோடு சிறிது ஒத்த தூலதரம், இவ்விந்திரியங்களிற் புலனாம் புறப் பொருட் குணங்கள் இவ்விந்திரியங்களோடு சிறிது ஒத்து இவ் விந்திரியங்களினுந் தூலமாவனவாம். இன்னும், ஞாயிற்றி னொளி பளிங் கினுள் விளங்கித் தோன்று மாறு போலக் கருங்கற் சுவர் முதலிய வற்றுள்ளே தோன்ற மாட்டாது; அஃதெதனாலெனின், ஞாயிற்றினொளி சூக்கும வடிவினதா கலால் அது தன்னோ டொருவாற்றால் ஒத்த சூக்குமம் வாய்ந்த பளிங்கினுண் மாத்திரமே விளங்குதற்கு உரிமை யுடைத்தாம்; ஏனைக் கருங்கல் முதலாயின அதனோடு ஒவ்வாத தூலப்பொருளாகலால் அவற்றின்கண் அது சிறிதும் விளங்க மாட்டாதாயிற்று. இங்ஙனமே உயிரின் அறிவொளியும் தன்னோடொரு சிறிது ஒத்த சூக்கும் தூலமான மனத்தினூடு விளங்குமாறு போல, மிகவுந் தூலமாய்த் தன்னியல்போடு ஒரு சிறிதும் ஒவ்வாத இந்திரியங்கண்மாட்டு விளங்குவதன்றாம். ஆனது பற்றியே, அவ்விந்திரியங்களை இயக்கிப் புறப்பொருள் களை அறிய வேண்டியக்கால், அவ்விந்திரிய வியல்போடும் உயிர்ப் பொருளான தன்னியல்போடும் ஒத்து இடை நிகர்த்த தாய் நிற்கும் மனம் என்னுங் கருவியினூடு உயிரறிவு நடைபெறு கின்ற தென்று ஓர்க. இங்ஙனம் பகுத்துக் காண்புழி உயிர் ஒன்றைத் தவிர அவ்வுயிரறிவு நிகழ்தற்குக் கருவியாம் அகக்கரண புறக்கரணங்கள் எல்லாம் வெறுஞ் சடங்களேயா மென்பதூஉம், அகக்கருவிகளுள் ஒன்றான மனமும் சடமே யாதல் இனிது பெறப்பட்டமையின் அஃது உடம்பினுள் மைந்த ஊன் உறுப்புக்களில் ஒன்றின் சாரமேயாவது திண்ணமா மென்பதூ உம், இந்திரியவுணர்வுகளுஞ் செயல் களும் தோன்றி நடைபெறு வதற்கு மூளையென்னும் ஊன்பிண்டமே காரணமாய் நிற்றலல்லது பிறிதியாது மில்லை யென்பது இஞ்ஞான்றை அங்கசேதன பண்டிதர் ஆராய்ச்சி யால் இனிது வலியுறுத்தப் படுதலின் அம்மூளையின் சாரமே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_28.pdf/71&oldid=1591400" இலிருந்து மீள்விக்கப்பட்டது