உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 28.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58

மறைமலையம் - 28

யினை எழுவிப்பதாகும். எனவே, உயிர்க்கு அறிவினை எழுவிப் பது சத்துவம் என்றும், அதற்குத் தொழிலினை எழுவிப்பது இராசதம் என்றும் பகுத்துணர்ந்து கொள்ளல் வேண்டும். ஆகவே, தொழிலினைத் தோற்றுவிக்கும் இவ்விராசதகுண தத்துவம் நான் என்னும் உணர்வுக்கு இடமான அகங்கார தத்துவத்திற் கலந்த மாத்திரையானே ஆண்டுப் பலதிறப்பட்ட முயற்சிகள் தோன்றி உயிரை விகாரமுறுத்துதலின் இவ் விராச தாகங்காரம் வைகாரி காகங்காரம் எனவும் வழங்கப்படும். இவ் வைகாரிகாகங்கார தத்துவத்தை உயிர் தலைப்பட்ட போதெல்லாம் அதற்கு நான் என்னும் உணர்வோடு பல திறப்பட்ட முயற்சிகளுந் தோன்றா நிற்கும். அற்றேல், இதற்கும் வாக்கு பாதம் பாணி பாயுரு உபத்தம் என்னும் கன்மேந்திரி யங்கள் ஐந்திற்கும் மேற்கூறாது எஞ்சி நின்ற இயைபே தேனும் உளதோ வெனின்;-- அறிவின்றி வெறுந்தொழின் மாத்திரையே புரியும் இக்கன்மேந்திரியங்கள் உயிரின் மாட்டு வெறுந் தொழிலையே வருவிக்கும் இவ்வைகாரிகாகங்காரத்தினின்றே பிறக்குமென்பது மேற்கூறியவாற்றாற் றனே போதருமென்க. எனவே, இவ்வகங்காரமும் இதனினின்று பிறக்குங் கன்மேந்திரி யங்களும் ஓரினமாய், முன்னையதிற் பின்னைய வைந்துந் தூலமாய் விரியுமென்பதூஉம் பெறப் பட்டவாறறிக.

இனித் தாமஸகுணம் என்பது இருள் எனப் பொருள்படும் தமஸ் என்னுஞ் சொல்லிற்றோன்றி இருட்டன்மையினையுடைய குணம் என்றாகும். இத்தத்துவம் இப்பெயர் பெற்ற தெதனா லோவெனின்;-ஆன்மாவைப் பொதிந்த மருள் என்னும்

ஆணவமலம்

ருண்டு சடமாய்க் கிடத்தலின், அதனோடி யைந்து அவ்வாணவ இருட்குணத்தைப் புலப்படக்காட்டும் இதுவும் அப்பெயர் பெற்றுத் தாமஸம் என்றாயது; இச்சொல் தமிழில் தாமதம் என்று திரிந்து வழங்கும். ஆணவமலம் இருட்டன்மையுடையதாதலுடன், அறிவில்லாத சடப் பொருளுமாயிருத்தலின் அதனோடு யைந்து நிற்கும் இத்தாமதகுண தத்துவமும் இருட்டன்மையோடு பரும்படி யான சடப்பொருளுமாய் இருக்கும். சத்துவம் இராசதம் தாதமம் என்னும் முக்குணங்களுள் சத்துவம் ஒளிவடிவான தூய சூக்கும தத்துவமாகும். இராசதம் அதனிற் சிறிது ஒளி குறைந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_28.pdf/83&oldid=1591412" இலிருந்து மீள்விக்கப்பட்டது