உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 28.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிவஞான போத ஆராய்ச்சி

57

தோன்றுதற்குத் தான் இடந்தருதல் பற்றி அவ்வருட் பொருளின் பயர்களான உண்மை, உண்மை, நன்மை என்பன இது தனக்கு முரியவாகக் கொண்டு சத்துவமென வழங்கப்படலாயிற்று. இது தூய சூக்குமமாய்ப் பொலியுந் தத்துவமாகலின் இது நான் என்னும் உணர்வினை ஆன்மாவின்கட் டோற்று வித்தற்கு இடமாய் நிற்கும் அகங்கார தத்துவத்தோடு ஒருங்கு சேர்த்து நின்றவழி, அச் சேர்க்கையில், புறப்பொருளறிவினை ஆன்மா வின் கண் நிகழ்விக்கும் கருவிகளான மெய் வாய் கண் மூக்குச் செவி என்னும் ஞானேந்திரியங்கள் ஐந்தும் மனம் என்னும் அந்தக்கரணம் ஒன்றும் தோன்றும். இவ்வகங்காரம் இங்ஙனம் சத்துவகுண தத்துவத்தோடு இயைந்த வழித் தைஜஸாகங்காரம் எனப் பெயர் பெறும்; தைஜஸ என்பது ஒளி எனப் பொருள்படும் தேஜஸ் என்னுஞ் சொல்லின் திரிபாகும்; சத்துவகுணம் தூய ஒளிமயமாய் விளங்கும் நுண்பொரு ரு ளாகலின் அதனோடு சேர்ந்து நின்ற அகங்கார தத்துவம் அங்ஙனம் தைஜஸாகங் காரம் எனப் பெயர் பெறலாயிற்று. இச்சொற்றொடர் தமிழில் தைசதாகங் காரமும் இதனிற் பிறக்கும் மனமும் ஞானேந்திரி யங்கள் ஐந்தும் ஓரினப் பொருள்கள் ஆயவாறு யாங்ஙனமெனிற் காட்டுதும். மேற்கூறிய வாற்றால் அறிவு மயமாய்ப் பொலியும் அருளொளிக்கு இடந்தந்து நிற்குஞ் சத்துவ குணத்தோடு ஒன்றுபட்டு நான் என்னும் உணர் வினையும் புலப்படுக்கும் இத்தைசதாகங்காரம் உயிர்க்கு அறிவினை நிகழ்விப்பது என்று கண்டாம். அங்ஙனமே L மனமும் ஞானேந்திரியங்கள் ஐந்தும் புறப் பொருட் குணங்களைக் கவர்ந்து உயிர்க்கு அறிவினை எழுப்பக் காண்டுமாகலின், இவையும் தைசதாங்காரமும் ஓரினப் பொருள் களாதலும், இம்முக்கூற்றுள் ஏனையிரண்டும் தைசதத்திற் றோன்றி ஒன்றினொன்று பருப் பொருளாய் விரிதலும் ஒரு தலை யாகத் துணியப்படும் என்க.

இனிராஜஸ குணம் என்பது காம விழைவு, முயற்சி எனப் பொருடரும் ரஜஸ் சம்பந்தமான குணம் என்று நுவலப்படும். இவ் ராஜஸ என்னும் பெயருரிச்சொல் தமிழில் இராசதம் எனத் திரிந்து நின்று அக் குணத்திற்கே பெயராய் வழங்கி வருகின்றது. இத் தத்துவத்தின் பொது வியற்கை உயிர்களிடத்து முயற்சி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_28.pdf/82&oldid=1591411" இலிருந்து மீள்விக்கப்பட்டது